2.4 ஓவர்.. 287 ரன்.. பாகிஸ்தான் செமி பைனல் போக புது கணக்கு.. டாஸ் மாறினாலும் கிளம்ப வேண்டியது தான்.. முழு விபரம்.!

தற்போது நடைபெற்று வரும் 2023 ஆம் ஆண்டிற்கான உலகக் கோப்பை போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டிக் கொண்டிருக்கின்றது. இதுவரை 41 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளன. இந்தப் போட்டியில் முடிவில் இந்தியா தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்திருக்கிறது. இன்று நியூசிலாந்து மற்றும் இலங்கை அணி களுக்கிடையே ஆன முக்கியமான போட்டி நடைபெற்றது.

- Advertisement -

இந்தப் போட்டியில் ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருப்பதன் மூலம் நியூசிலாந்து அணி 4-வது அணியாக இந்த வருட உலகக் கோப்பை தொடரில் அரை இறுதிப் போட்டியில் ஒரு கால் வைத்து விட்டது என்றே கூறலாம். இன்றைய போட்டி துவங்குவதற்கு முன்பாக இந்தப் போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் நியூசிலாந்து அணி களம் இறங்கியது. இதனைத் தொடர்ந்து டாஸ் வென்ற நியூஸிலாந்து முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது.

- Advertisement -

முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 171 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கிய நியூஸிலாந்து 23.2 ஓவர்களில் 172 ரன்கள் எடுத்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் நியூசிலாந்து அணியின் நெட் ரன்ரேட் +0.743 ஆக உயர்ந்து இருக்கிறது. இதன் மூலம் அந்த அணி பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளை விட அதிக அளவு ரன் ரேட் பெற்றிருக்கிறது.

- Advertisement -

இதன்மூலம் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் அரை இறுதி போட்டிக்கு தகுதி பெறுவதற்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனினும் பாகிஸ்தான் அணி முழுவதுமாக அரை இறுதி வாய்ப்பை இழந்திருக்கிறது என்று கூற முடியாது. கணக்குகளின் அடிப்படையில் அந்த அணியால் இன்னும் அருகில் தகுதி பெற முடியும். ஆனால் அது நிஜத்தில் நடப்பதில் சாத்தியம் இல்லாத ஒன்றாக இருக்கிறது. ஆப்கானிஸ்தான் அணியை பொறுத்த வரை அந்த அணிக்கு வாய்ப்புகள் முடிந்து விட்டது.

பாகிஸ்தான் அணி 11ம் தேதி நடைபெற இருக்கும் போட்டியில் இங்கிலாந்து அணியுடன் விளையாட இருக்கிறது. அந்தப் போட்டியில் வெற்றி பெற்றாலும் பாகிஸ்தான் அணியால் அரையிறுதிக்கு தகுதி பெற முடியாது . மேலும் சில நிபந்தனைகளுடன் வெற்றி பெற்றால் மட்டுமே அந்த அணி அரை இறுதிக்கு முன்னேறுவதற்காக மிக அரிதான வாய்ப்பே இருக்கிறது . இந்த வாய்ப்புகளும் ரியாலிட்டியில் நடப்பதற்கு முடியாத ஒன்று என்று கூட கூறலாம்.

- Advertisement -

தற்போது பாகிஸ்தான் அணியின் ரன்ரேட் + 0.036 ஆக இருக்கிறது. அந்த அணி அர இறுதிப் போட்டிக்கு பத்து புள்ளிகளுடன் தகுதி பெற வேண்டுமானால் நியூசிலாந்து அணியின் நெட் ரன்ரேட்டை விட அதிகம் இருக்க வேண்டும். அப்போதுதான் பாகிஸ்தான் அணி புள்ளிகள் பட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேறி அரை இறுதிப் போட்டிகளுக்கு தகுதி பெற முடியும். இதற்கு பாகிஸ்தான் அணி இங்கிலாந்தை முதல் பேட்டிங் செய்தால் எத்தனை ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் மற்றும் இரண்டாவது பேட்டிங் செய்தால் இங்கிலாந்து அணியை முதலில் எத்தனை ரன்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என பார்ப்போம்.

பாகிஸ்தான் அணி அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறுவதற்கு முதலில் பேட்டிங் செய்தால் குறைந்தது 287 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். அதாவது பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து 300 ரன்கள் எடுத்தால் இங்கிலாந்து அணியை 13 ரன்களுக்கு ஆல் அவுட் செய்ய வேண்டும். அதேநேரம் பாகிஸ்தான் அணி இரண்டாவது பேட்டிங் செய்தால் இங்கிலாந்து அணி எடுக்கும் ரன்களை 2.4 ஓவர்களில் சேஸ் செய்ய வேண்டும். உதாரணத்திற்கு இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 300 ரன்கள் எடுத்தால் அந்த இலக்கை பாகிஸ்தான் 2.4 ஓவர்களில் எட்ட வேண்டும். ஒருவேளை இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தால் பாகிஸ்தான் அணி நடையை கட்ட வேண்டியதுதான். இது போன்ற கணக்குகள் நடைமுறையில் நடப்பதற்கான வாய்ப்புகள் அரிதிலும் அரிது. நடக்கவே வாய்ப்பில்லை என்று கூட கூறலாம். இதனால் பாகிஸ்தான் அணி அரை இறுதிப் போட்டிகளுக்கு தகுதி பெரும் வாய்ப்பை ஏறக்குறைய இழந்து விட்டது என்பதே நிதர்சனம்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles