இவ்ளோ நாள் நம்பினேன் .. கிரிக்கெட்டில் அது வடிகட்டின பொய்.. மேக்ஸ்வெல் புரிய வச்சிட்டார்.. வாசிம் அக்ரம் ஓப்பன் டாக்.!

தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. பரபரப்பான இந்த போட்டியில் ஆஸ்திரேலியா மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்று இருக்கிறது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 291 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா ஒரு கட்டத்தில் 91 ரன்களுக்கு 7 விக்கெட் இழந்து தடுமாறியது. அப்போது ஆஸ்திரேலியா அணியின் அதிரடி ஆல் ரவுண்டர் மேக்ஸ்வெல் மற்றும் அந்த அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் இருவரும் இணைந்து 8-வது விக்கெட் பார்ட்னர்ஷிப்பாக 202 ரன்கள் சேர்த்து ஆஸ்திரேலியா அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இந்தப் போட்டியில் அதிரடியாக விளையாடிய கிளன் மேக்ஸ்வெல் 128 பந்துகளில் 10 சிக்ஸர்கள் மற்றும் 21 பௌண்டரிகள் உதவியுடன் 201 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் ஆஸ்திரேலிய அணியை தனி ஒருவனாக வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

- Advertisement -

இந்த அதிரடியான அபார ஆட்டத்தின் மூலம் நேற்றைய போட்டியில் பல்வேறு சாதனைகளையும் நிகழ்த்தி இருக்கிறார் அவர். ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் வரலாற்றில் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்த வீரர் 200 ரன்கள் கடந்தது இதுவே முதல் முறையாகும். மேலும் ஓபனிங் பேட்ஸ்மேன் இல்லாமல் மிடில் ஆர்டர் வீரர் ஒருவர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் வரலாற்றில் இரட்டை சதம் எடுத்ததும் இதுதான் முதல் முறை.

- Advertisement -

இவரது இந்த ஆட்டத்தை பாராட்டி உலகின் அத்தனை கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களும் இவருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் இவர் பேட்டிங் செய்தபோது தசைப்பிடிப்பாள் மிகவும் கஷ்டப்பட்டாலும் தனது அணிக்காக அதையும் பொறுத்துக் கொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிக்கு அழைத்துச் சென்றது பலரது மனங்களையும் வென்றுள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும் வேகப்பந்து வீச்சு ஜாம்பவானுமான வாசிம் அக்ரம் மேக்ஸ்வெல் ஆட்டத்தை வெகுவாக பாராட்டி இருக்கிறார். இது தொடர்பாக ஏ ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் கிரிக்கெட் வீரராக 20 ஆண்டுகள் பயிற்சியாளர் கிரிக்கெட் விமர்சகர் என 20 ஆண்டுகள் என மொத்தம் 40 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையில் இது போன்ற ஒரு அற்புதமான இன்னிங்ஸ் பார்த்ததில்லை என தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

இது தொடர்பாக பேசியிருக்கும் வாசிம் அக்ரம் ” தனி ஒருவனாக போட்டிகளை வெல்வது என்பது ஜாம்பவான்கள் செய்வது. தனி ஒரு நபரால் போட்டியை வெல்ல முடியாது என்ற ஒரு கருத்து உண்டு. அது எவ்வளவு பெரிய பொய் என மேக்ஸ்வெல் நமக்கு நிரூபித்திருக்கிறார். அவரது ஆட்டம் ஒரு சாம்பியனின் செயல். இதுபோன்று வலிகளுடன் விளையாடுவதற்கு உங்கள் மனம் மிகவும் வலிமையானதாக இருக்க வேண்டும். தசைப்பிடிப்புகளுடனும் வலியுடனும் விளையாடுவது அவ்வளவு எளிதான காரியமல்ல” என தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” இந்த வெற்றிக்கு ஆஸ்திரேலியா அணியின் கேப்டனுக்கும் நாம் அங்கீகாரம் கொடுக்க வேண்டும். ஆட்டத்தின் சூழ்நிலை கருதி பொறுமையாக விளையாடியவர் 68 பந்துகளில் 12 ரன்கள் சேர்த்திருந்தார். முக்கிய வீரரான மேக்ஸ்வெல் அதிக பந்துகளை சந்திக்கும்படி பார்த்துக் கொண்டார். இதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட மேக்ஸ்வெல் தான் எவ்வளவு சிறந்த வீரர் என்பதை உலகிற்கு காட்டி இருக்கிறார். கிரிக்கெட் வீரராக இருவது வருடங்களும் கிரிக்கெட் தொடர்பான பயிற்சிகள் மற்றும் வர்ணனையாளராக இருவது வருடங்கள் என கிரிக்கெட் தொடர்பான என்னுடைய 40 வருடங்களில் இது போன்ற ஒரு அற்புதமான ஆட்டத்தை பார்ப்பது இதுவே முதல்முறை” என கூறியிருக்கிறார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஜாம்பவான் வாசிம் அக்ரம்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles