என்ன வேணும்னாலும் சொல்லுங்க.. இந்த ஒரு விஷயம் நடக்கலனா இந்தியாவை யாராலும் தோற்கடிக்க முடியாது.. பாகிஸ்தான் லெஜன்ட் முகமது யூசுப் பேட்டி.!

2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை விளையாடிருக்கும் 8 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் 16 பாயிண்ட் உடன் முதலிடத்தில் இருக்கிறது. நவம்பர் ஐந்தாம் தேதி நடைபெற்ற சவுத் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் 243 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது.

- Advertisement -

இந்தப் போட்டி துவங்குவதற்கு முன்பாக முதல் இரண்டு இடத்தில் இருக்கும் அணிகள் மோதும் போட்டி என்பதால் பரபரப்பான போட்டியாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த போட்டியிலும் இந்திய அணியின் ஆதிக்கமே தொடர்ந்து. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்களில் 326 ரன்கள் எடுத்தது. விராட் கோலி 101 ரன்கள் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் 77 ரன்கள் எடுத்தனர். இதனைத் தொடர்ந்து விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 83 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளும் முகமது சமி 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

- Advertisement -

இந்த உலகக்கோப்பை தொடரில் இந்தியா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருவது குறித்து பல்வேறு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் பலரும் இந்திய அணியை பாராட்டி வருகின்றனர். குறிப்பாக பாகிஸ்தான் அணியின் லெஜெண்ட் வீரர்களான வாசிம் அக்ரம் சோயப் மாலிக் மற்றும் சோயப் அக்தர் ஆகியோர் இந்திய அணியை வெகுவாக பாராட்டி இருந்தனர். தற்போது இவர்களது வரிசையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் முகமது யூசுப் இந்திய அணியை வெகுவாக பாராட்டி இருக்கிறார்.

- Advertisement -

இது தொடர்பாக பேசியிருக்கும் அவர் தற்போது இந்திய அணியின் ஆட்டத்தை பார்க்கும் போது அவர்களை யாராலும் வீழ்த்த முடியாது. அவர்கள் ஒரு போட்டி கூட தோல்வியடையாமல் உலக கோப்பையை வெல்வார்கள் என்று நினைக்கிறேன்”என்று தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து பேசிய அவர் ” இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு முன்பு இந்தப் போட்டி பரபரப்பான ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் போட்டியின் முடிவில் இந்திய அணியின் ஆதிக்கமே தொடர்ந்தது. இந்தப் போட்டிக்குப் பிறகு ஒரே ஒரு அணி தான் டாப்பில் இருக்கிறது அது இந்தியா தான். இந்திய அணியிடம் டாப் கிளாஸ் பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். மேலும் அவர்களது பந்து வீக்கம் உலக தரத்தில் இருக்கிறது. பீல்டிங்கிலும் மிகச் சிறப்பாக செயல்படுகிறார்கள்”.

“மேலும் அவர்கள் ஒரு அணியாக இணைந்து செயல்படுகிறார்கள். இதனால் இந்த ஒரு ட உலகக் கோப்பையில் இந்தியா அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது” என தெரிவித்துள்ளார். இதுகுறித்து தொடர்ந்து பேசுகையில் ” இந்திய அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அவர்களது கடினமான உழைப்பு அவர்கள் விளையாடும் விதத்தில் இருந்து நமக்கு தெரிகிறது. இந்திய அணியின் இந்த சிறப்பான ஆட்டத்திற்கு அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பங்களிப்பை நாம் மறந்து விட முடியாது. அணியினர் ஒன்றாக தங்களது பங்களிப்பை வழங்குவதற்கு ட்ராவிட் கடுமையாக உழைத்திருக்கிறார். மேலும் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோரின் கூட்டணி மிக அழகாக இருக்கிறது.

- Advertisement -

அவர்கள் இருவரும் இணைந்து இந்திய அணி ஒரு அணியாக ஒரே இலக்குடன் ஆடுவதற்கு உதவுகின்றனர் என தெரிவித்தார். மேலும் தொடர்ந்து பேசுகையில் இந்திய அணியை துரதிர்ஷ்டத்தால் மட்டுமே தடுக்க முடியும். இந்தியா எல்லா விதத்திலும் முழுமையான ஒரு அணியாக இருக்கிறது. அந்தணியிடம் எந்த குறைகளையும் நாம் காண முடியவில்லை என்று தெரிவித்திருக்கிறார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் முகமது யூசுப்.

இந்திய அணி தனது அடுத்த போட்டியில் நவம்பர் 12ஆம் தேதி நெதர்லாந்து அணியுடன் பெங்களூரில் வைத்து விளையாட இருக்கிறது. அதனைத் தொடர்ந்து நவம்பர் 15-ஆம் தேதி நடைபெற இருக்கும் அரையிறுதி போட்டியில் புள்ளிகள் பட்டியலில் நான்காவது இடத்திற்கு தகுதி பெறும் அணியுடன் மும்பையில் வைத்து விளையாட உள்ளது. இந்த நான்காவது இடத்திற்காக நியூசிலாந்து ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகள் போட்டி போடுகின்றன.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles