தப்பு பண்ணிட்டாங்க.. 2 நிமிடம் முடியல.. மேத்யூஸ் நிறைய ரன் அடிச்சிருப்பாரு.. இலங்கை கேப்டன் ஏமாற்றமான பேச்சு.!

நடப்பு உலக கோப்பை தொடரின் 38 வது போட்டியில் இன்று இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதின. இந்தப் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் வைத்து நடைபெற்றது. தாஸ் வென்ற பங்களாதேஷ் அணியின் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

- Advertisement -

முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் 279 ரன்கள் எடுத்து ஆள் அவுட் ஆனது. இதனைத் தொடர்ந்து களம் இறங்கிய பங்களாதேஷ் அணி 41.1 ஓவரில் 281 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் இழந்து வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் பங்களாதேஷ் அணிக்காக
சான்டோ 90 ரன்களும் அந்த அணியின் கேப்டன் ஷகீப் அல் ஹசன் 82 ரன்களும் எடுத்தனர். பந்து வீட்டிலும் இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்திய ஷகீப் அல் ஹசன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

- Advertisement -

முன்னதாக இந்த போட்டியில் இலங்கை அணியின் அனுபவ வீரரான ஏஞ்சலோ மேத்யூஸ் ஆட்டம் இழந்த விதம் குறித்து பெரும் சர்ச்சை ஏற்பட்டது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் முதல் முறையாக அவர் டைம் அவுட் முறையில் ஆட்டம் இழந்தார். ஒரு பேட்ஸ்மேன் அவுட் ஆகி வெளியேறிய பிறகு அவர் வந்து ஸ்ட்ரைக் எடுக்க இரண்டு நிமிடங்களுக்கும் மேல் தாமதமானதால் அவர் டைம் ஓட் முறையில் ஆட்டம் இழந்தார். இந்த முறை குறித்து சிறிது சர்ச்சை ஏற்பட்டது.

- Advertisement -

இந்தப் போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம் இலங்கை அணி அதிகாரப்பூர்வமாக உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறி இருக்கிறது. இனி ஸ்ரீலங்கா நியூசிலாந்து அணியுடன் விளையாட இருக்கும் போட்டியில் வெற்றி பெற்றாலும் உலகக்கோப்பை தொடர்களில் அந்த வெற்றி எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. ஆனால் நியூசிலாந்து அணியுடன் இலங்கை அணியின் போட்டி பாகிஸ்தான் அணிக்கு முக்கியமான ஒன்று. மேலும் இலங்கை அணியின் வெற்றி அவர்கள் 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியில் இடம் பெறுவதற்கான வாய்ப்பை உறுதி செய்யும் ஒன்றாக இருக்கிறது.

மறுபுறம் பங்களாதேஷ் அணி நான்கு புள்ளிகள் உடன் ஏழாவது இடத்தில் இருக்கிறது. அந்த அணியின் மீது இருக்கும் போட்டியில் ஆஸ்திரேலியா உடன் விளையாட உள்ளது. பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளின் சாம்பியன் டிராபி போட்டிக்கான தகுதி அடுத்து வரும் உலகக்கோப்பை போட்டிகளில் முடிவு செய்யப்படும். எனினும் தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வந்த பங்களாதேஷ் அணிக்கு இந்த வெற்றி ஒரு உத்வேகம் தரும் ஒன்றாக அமைந்திருக்கிறது .

- Advertisement -

இந்நிலையில் போட்டிக்கு பின் பேசிய இலங்கை அணியின் கேப்டன் குஷால் மெண்டிஸ்” சரித் அசலங்கா மிகச் சிறப்பான ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தினார். எனினும் நாங்கள் 30 முதல் 40 ரன்கள் குறைவாகவே எடுத்திருந்தோம். இளம் வீரர்கள் பங்களிப்பை தருவது எங்கள் அணிக்கு மகிழ்ச்சியான ஒன்றாக இருக்கிறது. இந்த உலகக்கோப்பை போட்டிகளில் நாங்கள் சில தவறுகளை செய்தோம். அவற்றை திருத்திக் கொண்டு வரும் காலங்களில் ஒரு சிறந்த அணியாக உருவெடுப்போம் . எங்கள் அணியின் முக்கிய வீரர்களுக்கு காயம் ஏற்பட்டதும் எங்களது தோல்விக்கான காரணங்களில் ஒன்று” என்று தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” தாங்கள் சிறப்பான கிரிக்கெட்டை ஆடி இருந்தால் அரை இறுதிப் போட்டிகளுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பு அமைந்திருக்கும். எதிலும் எங்களது தோல்வி ஒரு பெரிய ஏமாற்றமே. ஏஞ்சலோ மேத்யூஸ் ஆடுகளத்திற்கு விளையாட சென்ற போது ஐந்து நொடிகள் மீதி இருந்தது. அப்போதுதான் அவரது ஹெல்மெட்டில் ஸ்ட்ராப் சரியாக இல்லாததை கவனித்து அதனை மாற்ற முயற்சி செய்தார். அவரது ஆட்டம் இழப்பு அவர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது நடுவர்கள் இதில் தலையிட்டு சரியான முடிவு எடுத்திருக்கலாம். அவரது விக்கெட் போட்டியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அவர் ஆடி இருந்தால் நாங்கள் அதிக ரன்கள் எடுத்து இருப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது” எனக் கூறி முடித்தார் இலங்கை அணியின் கேப்டன் மெண்டிஸ்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles