நீங்க நினைக்கிற மாதிரி இல்ல.. ஹர்திக் பாண்டியாக்கு பதிலா பிரசித் கிருஷ்ணா எடுக்க காரணம் இருக்கு .. ராகுல் டிராவிட் விளக்கம்.!

தற்போது நடைபெற்று வரும் 13 வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் அரை இறுதிப் போட்டிகளுக்கு தகுதி பெற்று இருக்கிறது. அதிலும் குறிப்பாக இந்தியா விளையாடிய ஏழு போட்டிகளிலும் வெற்றி பெற்று 14 புள்ளிகள் உடன் முதலிடத்தில் இருக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணி நாளை நடைபெற இருக்கும் லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணியை எதிர்த்து விளையாட உள்ளது. இந்தப் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த உலகக் கோப்பையில் பலம் வாய்ந்த இரண்டு அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி என்பதால் இந்தப் போட்டிக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.

- Advertisement -

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா கடந்த அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியின் போது காயம் அடைந்து வெளியேறினார். இதனைத் தொடர்ந்து நியூசிலாந்து இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் உடனான போட்டியில் அவர் விளையாடவில்லை. பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்று வந்தார். அவரது கணுக்காலில் ஏற்பட்ட காயம் குணமடைய 10 முதல் 15 நாட்கள் தேவைப்படும் என்பதால் அரை இறுதிப் போட்டிகளில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

இந்நிலையில் இன்று ஹர்திக் பாண்டியா உலகக் கோப்பை இந்திய அணியில் இருந்து காயம் காரணமாக வெளியேறி இருக்கிறார் என்ற செய்தி இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஹர்திக் பாண்டியா இந்திய அணியில் இடம் பெறும்போது இந்திய அணியின் சமநிலை சரியான அளவில் இருந்தது
அவர் அணியில் இருக்கும் போது பேட்டிங் பலம் அதிகமாக இருப்பதோடு ஆறாவது பந்துவீச்சாளரும் இந்தியா அணிக்கு கிடைக்கிறார். தற்போது அவர் அணியில் இருந்து வெளியேறி இருப்பதால் அவருக்கு பதிலாக வேகப்பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா இந்திய அணியில் இடம் பெற்று இருக்கிறார்.

ஒரு ஆல் ரவுண்டருக்கு பதிலாக வேகப்பந்துவீச்சாளர் தேர்வு செய்யப்பட்டு இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கிறது. இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் தங்களது விமர்சனங்களை முன் வைத்திருந்தனர். இந்நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பிரசித் கிருஷ்ணா அணியில் தேர்வு செய்யப்பட்டதற்கான காரணத்தை விளக்கியிருக்கிறார். மேலும் அவரது தேர்வு இந்திய அணிக்கு எவ்வளவு முக்கியமானது என்றும் தனது செய்தியாளர்கள் சந்திப்பில் பகிர்ந்து இருக்கிறார் ராகுல் டிராவிட்.

- Advertisement -

இதுகுறித்து பேசிய ராகுல் டிராவிட் ” ஹர்திக் பாண்டியா காயம் அடைந்த பிறகு நாங்கள் மூன்று வேகப்பந்துவீச்சாளர்களுடன் விளையாடி வருகிறோம். அணியில் பேக் அப் வீரர்களாக ஒரு சுழற் பந்துவீச்சாளர் மற்றும் ஒரு ஆல் ரவுண்டர் இருக்கிறார்கள். வேக பந்துவீச்சாளர்களுக்கு என எந்த ஒரு பேக்கப்பும் எங்களிடம் இல்லை. அதனால் தான் ஏகப்பந்திவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார் என வணக்கம் அளித்திருக்கிறார் இந்திய அணியின் பயிற்சியாளர்.

மேலும் இந்திய அணியின் ஆறாவது பந்துவீச்சாளர் குறித்த பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த ராகுல் டிராவிட் ” எங்களிடம் வித்தியாசமான இன் ஸ்விங் கர் வீசக்கூடிய ஒரு திறமையான பந்து வீச்சாளர் இருக்கிறார். கடந்த போட்டியில் கூட அவரைப் பந்து வீசுமாறு ரசிகர்கள் கேட்டுக் கொண்டனர். அணிக்கு தேவைப்படும்போது அவரால் ஒரு சில ஓவர்கள் வீச முடியும் விராட் கோலியை குறிப்பிட்டு நகைச்சுவையுடன் பேசினார் ராகுல் டிராவிட் .

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles