தோனிக்கு இடமில்லை.. தினேஷ் கார்த்திக் தேர்வு செய்த இந்திய அணியின் ஆல் டைம் 11… தமிழக வீரருக்கு இடம்

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக் 2024 ஆம் வருட ஐபிஎல் தொடருடன் அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார் . மேலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இவரை பேட்டிங் ஆலோசகராக நியமித்திருக்கிறது. இந்நிலையில் தினேஷ் கார்த்திக் அனைத்து வடிவங்களுக்கான எல்லா காலங்களிலும் தனது சிறந்த இந்திய அணியை தேர்வு செய்து இருக்கிறார். இதில் இந்தியாவின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் பெயர் விடுபட்டிருப்பது கிரிக்கெட் ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

- Advertisement -

முன்னாள் சர்வதேச வீரர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் பலரும் சிறந்த கிரிக்கெட் அணியை தேர்வு செய்து தங்களது சமூக வலைதள வலைதள பக்கங்களில் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் கிரிக்பஸ் இணையதளம் நடத்திய சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தினேஷ் கார்த்திக் கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களுக்கான ஆல் டைம் சிறந்த இந்திய அணியை தேர்வு செய்தார். இந்த அணியில் சமகால இந்திய கிரிக்கெட் வரலாற்றில் சிறப்பாக செயல்பட்டு சாதனை புரிந்த இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் பலரும் இடம் பெற்றுள்ளனர்.

- Advertisement -

எனினும் இந்திய அணிக்காக மூன்று ஐசிசி கோப்பைகளை வென்று கொடுத்த முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மற்றும் கேப்டனான எம்.எஸ் தோனியின் பெயர் இடம்பெறாதது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போதைய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி ஆகியோர் இந்த அணியில் இடம் பெற்றுள்ளனர். மேலும் தமிழகத்தைச் சேர்ந்த ஆல் ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வினும், தினேஷ் கார்த்திக்கின் அணியில் இடம் பெற்று இருக்கிறார்.

- Advertisement -

தினேஷ் கார்த்திக் தேர்ந்தெடுத்துள்ள ஆல் டைம் சிறந்த இந்திய அணியில் 5 பேட்ஸ்மேன்கள் 2 ஆல் ரவுண்டர்கள் 2 சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் 2 வேகப்பந்துவீச்சாளர்கள் இடம் பெற்றுள்ளனர். தினேஷ் கார்த்திக் தேர்ந்தெடுத்துள்ள அணியில் துவக்க வீரர்களாக விரேந்தர் சேவாக் மற்றும் ரோகித் சர்மா இடம் பிடித்துள்ளனர். இவர்களைத் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் ராகுல் டிராவிட் இடம் பெற்று இருக்கிறார். நான்காவது வீரராக இந்திய அணியின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் இடம் பெற்றுள்ளார்.

அவரைத் தொடர்ந்து ஐந்தாவது வீரராக விராட் கோலி களம் இறங்குகிறார். ஆறாவது மற்றும் ஏழாவது வீரர்களாக இந்திய அணியின் சிறந்த ஆல் ரவுண்டர்களான யுவராஜ் சிங் மற்றும் ரவீந்திர ஜடேஜா இடம் பெற்றுள்ளனர். இவர்களைத் தொடர்ந்து எட்டாவது இடத்திற்கு ரவிச்சந்திரன் அஸ்வினையும் ஒன்பதாவது இடத்திற்கு அணில் கும்பளேவையும் தேர்ந்தெடுத்து இருக்கிறார் தினேஷ் கார்த்திக். இவர்களைத் தொடர்ந்து ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் ஜாகீர் கான் ஆகியோர் 2 வேகப்பந்துவீச்சாளர்களாக தினேஷ் கார்த்திக் அணியில் இடம் பிடித்துள்ளனர்.

- Advertisement -

தனது அணி குறித்து பேசிய தினேஷ் கார்த்திக் இந்தியாவில் 11 வீரர்களை மட்டும் சிறந்த அணிக்காக தேர்வு செய்வது என்பது கடினமான ஒன்று என்று தெரிவித்தார். நம் நாட்டில் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்கள் பலரும் உள்ளனர். அவர்கள் பல்வேறு சாதனைகளையும் படைத்து இருக்கின்றனர். எனினும் 11 வீரர்களில் அனைவரையும் தேர்வு செய்ய முடியாது என கூறியிருக்கிறார். ஆறாவது மற்றும் ஏழாவது இடத்திற்கு பல்வேறு வீரர்களை யோசித்ததாக தெரிவித்த அவர் யுவராஜ் சிங் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அந்த இடத்திற்கு பொருத்தமானவர்களாக இருப்பார்கள் என்பதால் தேர்வு செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

தினேஷ் கார்த்திக் தேர்வு செய்த ஆல் டைம் சிறந்த இந்திய அணி

விரேந்தர் சேவாக்
ரோஹித் சர்மா
ராகுல் டிராவிட்
சச்சின் டெண்டுல்கர்
விராட் கோலி
யுவராஜ் சிங்
ரவீந்திர ஜடேஜா
ரவிச்சந்திரன் அஸ்வின்
அணில் கும்ப்ளே
ஜஸ்ப்ரீத் பும்ரா
ஜாகீர் கான்

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles