இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்கால நட்சத்திரமாக உருவாக்கிக் கொண்டிருப்பவர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த அபிஷேக் ஷர்மா. கடந்த ஐபிஎல் சீசனில் இவர் அடித்த அதிரடி ஆட்டத்தால்தான் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தது. இந்த நிலையில் யுவராஜ் சிங் குறித்து அபிஷேக் சர்மா சில முக்கிய கருத்துக்கள் கூறியிருக்கிறார்.
அபிஷேக் ஷர்மாவுக்கு இந்த ஐபிஎல் சீசன் மிகச்சிறப்பான ஒன்றாக அமைந்திருக்கிறது. தொடக்க இடத்தில் இவரது அதிரடி ஆட்டம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை அரையிறுதி போட்டி வரை செல்ல உதவியிருக்கிறது. அந்த சீசனில் மொத்தமாக அபிஷேக் ஷர்மா 484 ரன்கள் விளாசி இருக்கிறார். இதனால் இவருக்கு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் வாய்ப்பும் கிடைத்தது.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் களமிறங்கி முதல் போட்டியில் டக் அவுட் ஆகி வெளியேறினாலும், இரண்டாம் போட்டியில் அதற்கும் சேர்த்து மொத்தமாக 46 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். அதுவும் 80 ரன்களுக்கு மேல் ஆடிக்கொண்டிருந்த போது, தொடர்ச்சியாக மூன்று ஹேட்ரிக் சிக்ஸர்களை விளாசி தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அபிஷேக் ஷர்மாவுக்கு யுவராஜ் சிங் தான் கிரிக்கெட்டின் ரோல் மாடல் என்று பலமுறை பேட்டிகளில் கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் பதினாறு வயதில் தான் ரஞ்சி டிராபியில் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிரணி வீரர் தன்னை ஸ்லட்ஜிங் செய்ததாகவும், அதிலிருந்து யுவராஜ் சிங் காப்பாற்றியதாகவும் கூறி இருக்கிறார்.
இதுகுறித்து அபிஷேக் ஷர்மா விரிவாக கூறும்பொழுது “நாங்கள் ரஞ்சிக்கோப்பையில் விளையாடிக் கொண்டிருந்த போது எங்களுக்கு எதிராக ஒரு வீரர் சதம் அடித்தார். அப்போது அவருக்கு எதிராக நாங்கள் ஸ்லெட்ஜிங் செய்யலாம் என்று முடிவெடுத்தோம். இருப்பினும் ஒரு இளைஞன் அது போன்ற செயல்களில் ஈடுபட்டால் உங்களுக்கு நிச்சயம் கோபம் வரும். ஆனால் நான் பேட்டிங் செய்ய சென்றபோது எதிரணி வீரர் என்னை ஸ்லெட்ஜிங் செய்தார். அவர் அவ்வாறு செய்வதை யுவராஜ் சிங் பார்த்து என்னிடம் கேட்டார்.
இதையும் படிங்க:பாண்டியாவுக்கு எதற்காக இந்த பொறுப்பு.? அவர் ஒரு ஃபார்மேட்ல விளையாடுறதே இல்ல – நெக்ரா பேட்டி
நான் அவர் என்னை தொந்தரவு செய்கிறார் என்று கூறியதும், யுவராஜ் சிங் அவரை பார்த்து முறைத்தார். அடுத்த நொடியே அந்த வீரர் தான் செய்தது தவறு தான் மன்னித்து விடுங்கள் என்று மன்னிப்பு கேட்டு சென்று விட்டார். இப்படி 16 வயதிலேயே யுவராஜ் சிங் என்னை காப்பாற்றி இருக்கிறார். அந்த சீசனில் யுவராஜ் 800 முதல் 900 ரன்கள் குவித்து தனது கம்பேக் சீசனை வெளிப்படுத்தினார். 2007ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை யுவராஜ் சிங் விளையாடியது எனக்கு மறக்க முடியாத அனுபவம் ஆகும். கிரிக்கெட்டில் மிகப்பெரிய உத்வேகம் அடைந்தேன்” என்று கூறி இருக்கிறார்.

