பாண்டியாவுக்கு எதற்காக இந்த பொறுப்பு.? அவர் ஒரு ஃபார்மேட்ல விளையாடுறதே இல்ல – நெக்ரா பேட்டி

இலங்கை அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் டி20 தொடருக்கு புதிய கேப்டனாக சூரியகுமார் யாதவை இந்திய கிரிக்கெட் நிர்வாகம் நியமித்திருக்கிறது. ஹர்திக் பாண்டியா எதற்காக கேப்டன் ஆக்கப்படவில்லை என்று பல முன்னாள் வீரர்கள் விமர்சனங்கள் எழுப்பி வரும் நிலையில், முன்னாள் இந்திய வேகபந்து வீச்சாளர் நெக்ரா தனது கருத்தை தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

ஹர்திக் பாண்டியா ஐபிஎல்லில் முதன் முதலில் அறிமுகமானது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தான். அதன் பிறகு சில காரணங்களால் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் அவரை கழட்டி விட, ஐபிஎல்லில் 2022ஆம் ஆண்டு புதிதாக களமிறக்கப்பட்ட லக்னோ மற்றும் குஜராத் அணிகளில் லக்னோ அணிக்கு கே எல் ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட, குஜராத் அணிக்கு பயிற்சியாளர் நெக்ராவின் அறிவுறுத்தலின் பேரில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

- Advertisement -

தங்களது முதல் சீசனிலேயே குஜராத் அணி சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியது. அதற்குப் பிறகு 2023ஆம் ஆண்டில் குஜராத் அணி இறுதிப் போட்டி வரை வந்து தோல்வியடைந்தது. அதற்குப் பிறகு மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி திரும்பவும் தங்கள் அணிக்கே அவரைக் கேப்டனாக நியமித்தது.

- Advertisement -

ஆனால் இந்த சீசன் அவருக்கு சரியாக அமையாமல் இருந்த சூழ்நிலையில், புதிதாக அறிவிக்கப்பட்ட உலகக் கோப்பை டி20 அணிக்கு ஹர்திக் பாண்டியா துணை கேப்டன் ஆக நியமிக்கப்பட்டிருந்தார். இந்த தொடரில் நன்றாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியா இந்திய அணி டி20 உலக கோப்பையை வெல்லவும் முக்கிய காரணமாக அமைந்தார். இந்த சூழ்நிலையில் நெக்ரா ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டதுதான் தனக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்று கூறி இருக்கிறார்.

இது குறித்து நெக்ரா விரிவாக கூறும்பொழுது “கிரிக்கெட்டைப் பொறுத்தவரை நடக்கக்கூடிய எல்லாமே ஆச்சரியம்தான். என்னை பொருத்தவரை டி20 உலக கோப்பையில் ஹர்திக் பாண்டியாவுக்கு துணை கேப்டன் பதவி வழங்கப்பட்டது தான் ஆச்சரியமான ஒன்றாக இருக்கிறது. அதே வேளையில் இந்தியாவுக்கு புதிய பயிற்சியாளர் வருகிறார், அவரது சிந்தனை வேறு மாதிரியாக இருக்கிறது. மேலும் ஒரு பயிற்சியாளருக்கும், ஒரு கேப்டனுக்கும் என்று ஒரே மாதிரியான எண்ணங்கள் என்று சிலவற்று இருக்கும்.

- Advertisement -

இதையும் படிங்க:கில்லுக்கு எதுக்கு துணை கேப்டன் பதவி?. அவர்கிட்ட அப்படி என்னதான் இருக்கு – ரகசிய முறைக்கும் அஜித் அகர்கர்

பாண்டியாவை ஏன் கேப்டனாக கொண்டு வரவில்லை என்று அதற்கான விளக்கமும் தேர்வுக்குழு தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டிருக்கிறது. பாண்டியாவின் உடல் தகுதி குறித்து நான் தவறாக எதுவும் கூறவில்லை. ஆனால் பாண்டியா ஒரே ஒரு பார்மெட்டில் தான் தொடர்ந்து விளையாடுகிறார். ஒரு நாள் போட்டிகளில் கூட அதிகம் அவர் விளையாடுவதில்லை. இதனால் எண்ணங்கள் என்பது அனைவருக்கும் வேறு வேறாக உள்ளது” என்று கூறி இருக்கிறார்

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles