என்னது.. பிஜேபி ஆட்சிக்கு வந்தா.. இந்தியா உலகக் கோப்பை ஜெயிக்காதா.? வரலாற்றை புரட்டும் ரசிகர்கள்

ஐபிஎல் தொடரின் போது இந்தியாவில் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெற்றது. தற்போது அமெரிக்காவில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில், நாடாளுமன்ற பொது தேர்வதல் முடிவுகள் தற்போது வெளிவந்துள்ளது.

- Advertisement -

அதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தற்போது வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க உள்ள நிலையில், அதை வைத்து கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கலாய்த்து வருகிறார்கள். அதாவது பாஜக அரசு ஆட்சி அமைப்பதற்கும், கிரிக்கெட் ரசிகர்கள் கலாய்ப்பதற்கும் உள்ள தொடர்பை தற்போது பார்க்கலாம்.

- Advertisement -

உலகக்கோப்பையை பொறுத்தவரை இந்திய அணி 1983, 2007 மற்றும் 2011ஆம் ஆண்டு என மூன்று முறை உலக கோப்பையை வென்றுள்ளது. 1983 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் 50 ஓவர் உலகக் கோப்பையையும், 2007ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையையும் வென்றுள்ளது. இந்த மூன்று முறை இந்திய அணி உலக கோப்பையை வென்ற போது காங்கிரஸ் கட்சியே அப்போது ஆட்சியில் இருந்தது.

- Advertisement -

ஆனால் பாஜகவின் ஆட்சிக் காலத்தில் இருந்து இந்திய அணி ஒரு முறை கூட உலக கோப்பையை வென்றது கிடையாது. 2003ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்த போது அப்போது ஆட்சியில் இருந்தது இதே பாஜக கட்சிதான். இதேபோல கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பையிலும் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தது.

அப்போதும் பாஜக கட்சியே ஆட்சியில் இருந்தது. இப்படி பாஜக ஆட்சியில் இருக்கும் போதெல்லாம் இந்திய அணி உலக கோப்பையை வென்றது கிடையாது என கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தற்போது மீம்ஸ்களை பறக்கவிட்டுக் கொண்டிருக்கின்றனர். பாஜக எப்போதெல்லாம் ஆட்சியில் இருக்கிறதோ அப்போதெல்லாம் நடைபெறும் உலகக்கோப்பை தொடர்களில் இந்திய அணி உலக கோப்பைகளை வென்றதில்லை.

- Advertisement -

இந்த நிலையில் தற்போது 2024ம் ஆண்டு டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில், இந்த முறையும் பாஜக கட்சியே மீண்டும் ஆட்சி அமைத்திருக்கிறது. இதனால் இதற்கு முன்னர் நடந்த வரலாற்றை ஒப்பிட்டு ரசிகர்கள் தற்போது கிண்டல் செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க:இந்த ஒரு விஷயத்தில் எங்களுக்கு அழுத்தம் என்பது உண்மைதான்.. ஆனால் மக்கள் இதை மட்டும் மறக்கவே மாட்டார்கள்.. ரிஷப் பண்ட் பேட்டி

பொழுதுபோக்கிற்காக இது போன்ற மீம்ஸ்களை சமூக வலைதளங்களில் பரப்பலாமே தவிர, அன்றைய நாளில் எந்த அணி சிறப்பாக செயல்படுகிறதோ அந்த அணியே கோப்பையை கைப்பற்றுவதற்கு முழு தகுதி வாய்ந்தது. எனவே இந்திய அணி கடந்த கால தோல்விகளை மனதில் வைத்து இந்த முறை டி20 உலக கோப்பையை கைப்பற்றுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles