இந்த ஒரு விஷயத்தில் எங்களுக்கு அழுத்தம் என்பது உண்மைதான்.. ஆனால் மக்கள் இதை மட்டும் மறக்கவே மாட்டார்கள்.. ரிஷப் பண்ட் பேட்டி

தற்போது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில், இந்திய அணி தனது முதல் போட்டியாக நாளை அயர்லாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது.

- Advertisement -

இந்தப் போட்டிக்கு பின்னர் வருகிற ஒன்பதாம் தேதி கிரிக்கெட்டில் முக்கிய போட்டியாக கருதப்படும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. இந்திய அணியின் வீரர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் இந்திய அணி விளையாட உள்ள போட்டிகள் குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்கள்.

- Advertisement -

நாளை நடைபெற உள்ள அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி எளிதாக வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்திய அணியில் தொடக்க வீரர்களாக களம் இறங்கப் போவது யார்? பந்துவீச்சில் என்ன மாதிரியான காம்பினேஷன்களுடன் இந்திய அணி களமிறங்கும்? என்பது குறித்த விவரங்கள் நாளை நடைபெறும் போட்டியில்தான் தெரியவரும்.

- Advertisement -

மேலும் டி20 கிரிக்கெட் பொருத்தவரை பாகிஸ்தான் அணி இந்தியாவை ஒரே ஒரு முறை வீழ்த்தி இருக்கிறது. 2022ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெறும் சூழலில் இருந்து விராட் கோலி ஒரே ஆளாக நின்று போட்டியை கடைசிவரை எடுத்துச் சென்று இந்திய அணியை வெற்றி பெற வைத்தார்.

நாளை முதல் போட்டி நடைபெற உள்ள நிலையில் இந்திய அணி வீரர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் பண்ட் ஆகியோர் இந்திய ரசிகர்கள் குறித்தும் போட்டிகள் குறித்தும் சில முக்கிய கருத்துக்களை தெரிவித்து இருக்கின்றனர். இது குறித்து ஹர்திக் பாண்டியா கூறும் பொழுது
“நாங்கள் செல்லும் இடமெல்லாம் ரசிகர்களின் ஆதரவு பெரிதாக இருக்கிறது. எங்கள் அணி பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெறுவதை நான் உறுதி செய்ய வேண்டும்.

- Advertisement -

இந்தப் போட்டிக்கான எதிர்பார்ப்பு என்பது எப்போதுமே அசாதாரணமாக இருக்கும். ஆனால் இதையெல்லாம் நாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் போட்டியில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டியது முக்கியம். ரசிகர்களுக்கு நான் எப்போதுமே நன்றி உள்ளவனாக இருக்க வேண்டும். ரசிகர்கள் தான் எங்களை எப்போதுமே ஆதரிக்கிறார்கள்” என்று ஹார்த்திக் பாண்டியா கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க:ஓபனிங்லா நல்லாதான் இருக்கு ஆனா பினிஷிங் சரியில்லை.. சாம்சனுக்கு பதிலா அவரையே களம் இறக்குங்க.. சுனில் கவாஸ்கர் ஓபன் டாக்

இதுகுறித்து விக்கெட் கீப்பரான ரிஷப் பன்ட் கூறும் பொழுது
“உலகக் கோப்பையை பொறுத்த வரை இந்தியா, பாகிஸ்தான் போட்டி என்பது எப்போதும் முக்கியத்துவம் வாய்ந்தது. இது எப்போதுமே ஒரு உற்சாகம் நிறைந்திருக்கும். இந்த போட்டியை மக்கள் எப்போதுமே நினைவில் வைத்திருப்பார்கள் என்பதால் இதில் எப்போதுமே ஒரு ஸ்பெஷலான அழுத்தம் இருக்கும்” என்று கூறி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles