விராட் கோலி இருக்கிற ஃபார்முக்கு 5 பந்துகள் கூட வெயிட் பண்ண வேணாம்.. இந்திய அணி இத கண்டிப்பா பண்ணியே ஆகணும்.. கூறுகிறார் சுனில் கவாஸ்கர்

வருகிற டி20 உலக கோப்பையில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலிதான் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியிருக்கிறார்.

- Advertisement -

ஒன்பதாவது டி20 உலக கோப்பை தற்போது வெற்றிகரமாக தொடங்கி முதல் போட்டி அமெரிக்காவில் உள்ள டல்லாஸ் கிராண்ட் ப்ரெரி மைதானத்தில் அமெரிக்கா மற்றும் கனடா அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி நடைபெற்றது. அதில் அமெரிக்க அணி தங்களது வெற்றிக் கணக்கை துவங்கியிருக்கிறது.

- Advertisement -

இந்திய அணி தனது முதல் பயிற்சி போட்டியில் வங்கதேச அணியை வீழ்த்தி மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது. வருகிற ஐந்தாம் தேதி அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ளது. பயிற்சி போட்டியில் விராட் கோலி களமிறங்கவில்லை அதற்கு பதிலாக சஞ்சு சாம்சன் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரே தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கி சிறப்பாக விளையாடிய, விராட் கோலி இந்த டி20 உலக கோப்பையில் ரோகித் சர்மா உடன் களமிறங்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியிருக்கிறார்.

இது குறித்து சுனில் கவாஸ்கர் விரிவாக கூறும்பொழுது
“இந்த முறை டி20 உலக கோப்பையில் ரோஹித் சர்மா உடன் விராட் கோலி தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வேண்டும். ஐபிஎல் தொடரில் இரண்டாவது பகுதியில் சிறப்பாக விளையாடியதை வைத்து ரோஹித் சர்மா உடன் விராட் கோலி தொடக்க ஆட்டக்காரராக களம் இறக்கலாம்.

- Advertisement -

நல்ல வீரர்கள் அவர்கள் வலது அல்லது இடது கை வீரர்களாக இருந்தாலும், எந்த இடத்தில் களமிறங்கினாலும் சிறப்பாக செயல்படுவார்கள். எனவே இடது வலது காம்பினேஷனில்தான் பேட்ஸ்மேன்கள் களமிறங்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. தொலைக்காட்சியில் வேண்டுமானால் இதுபோன்று பேசுவதற்கு நன்றாக இருக்கும். விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா என்ற இரண்டு அற்புதமான பேட்ஸ்மேன்கள் நமக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக கிடைத்திருக்கிறார்கள்.

இதையும் படிங்க:எங்க பாத்தாலும் இத பத்திதான் பேசுறாங்க.. எனக்கே பதட்டமா இருக்கு.. இந்தியா பாகிஸ்தான் போட்டி குறித்து பாபர் ஆஸம் பேட்டி

அதிலும் குறிப்பாக விராட் கோலி பேட்டிங் செய்வதற்கு ஐந்து பந்துகள் கூட காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் தற்போது மிகச் சிறந்த பார்மில் இருக்கிறார். நீங்கள் பொதுவாக பார்ட்னர் உடன் களமிறங்குவதற்கு தனியாக களம் இறங்குவதற்கு வித்தியாசம் உள்ளது. நாம் சேர்ந்து களமிறங்குவோம் என்று சொல்லிக் கொண்டு அவர்கள் விளையாடுவார்கள்” என்று சுனில் கவாஸ்கர் கூறியிருக்கிறார். இந்திய அணி தனது முதல் போட்டியை அயர்லாந்து அணிக்கு எதிராக தொடங்க இருக்கிறது

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles