டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது அமெரிக்காவில் நடந்து வரும் நிலையில் ஐசிசி நடத்தும் தொடர்களில் பாகிஸ்தான் அணி இந்தியாவை ஒரே ஒரு முறை மட்டும் வென்று இருக்கிறது.
தற்போதைய பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் தலைமையில் கடந்த 2021ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் அணி ஒரே ஒருமுறை இந்திய அணியை டி20 உலக கோப்பையில் தோற்கடித்தது. இந்த சூழ்நிலையில் இந்தியா, பாகிஸ்தான் போட்டி தனக்கு பதட்டத்தை ஏற்படுத்துவதாக பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசம் கூறியிருக்கிறார்.
தற்போது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் ஒன்பதாவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த முறை நடைபெற்ற இந்தியா, பாகிஸ்தான் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ரசிகர்களுக்கு மறக்க முடியாத போட்டியாக அமைந்தது. அந்த நாளில் விராட் கோலி தனி ஒரு ஆளாய் நின்று இந்திய அணியை வெற்றி பெற வைப்பார்.
அடுத்து வரும் போட்டி குறித்து பேசி உள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் ஆஸம் கூறும் பொழுது
“இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோத உள்ள போட்டி அதிக விவாதத்தை ஏற்படுத்தும் என்று எனக்கு தெரியும். இந்த போட்டி தற்போது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இது வீரர்கள் மட்டுமின்றி தற்போது ரசிகர்கள் மத்தியிலும் அதிக விவாத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
நீங்கள் எங்கு சென்றாலும் தற்போது இந்தியா பாகிஸ்தான் போட்டி குறித்து பேசுகிறார்கள். அவரவர்கள் தங்கள் சொந்த நாட்டின் அணியை ஆதரிக்கிறார்கள். ஒவ்வொரு ரசிகனும் இந்த போட்டிக்காக காத்திருப்பது மட்டுமல்லாமல் இந்த போட்டியில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். நான் ஓப்பனாக சொல்ல வேண்டும் என்றால் இந்தப் போட்டி மீதான எதிர்பார்ப்பு எனக்கு பதட்டத்தை உண்டாக்குகிறது.
இதை எப்படி கையாள போகிறோம் என்பது அவரவர் தனிப்பட்ட விஷயங்களைச் சார்ந்தது. இதில் கவனம் செலுத்தாமல் ஒரு வீரராக போட்டியில் மட்டுமே கவனம் செலுத்துவது மிகவும் நல்லது என்று நான் நினைக்கிறேன். மேலும் கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நாங்கள் வெற்றி பெற்று இருக்க வேண்டும்.
இதையும் படிங்க:கம்பீர் அப்படி பண்ணினது எனக்கே ஷாக்கா இருந்தது.. இதுக்கு முன்னாடி இப்படி ஒரு ஆள நான் பார்த்ததே இல்லை.. தினேஷ் கார்த்திக் கூறும் ரகசியம்
இது ஒரு அதிகபட்சமாக அழுத்தம் இருக்கும் போட்டியாக நான் உணர்கிறேன். நீங்கள் எப்பவும் போல இயல்பாக இருந்து உங்கள் அடிப்படை விஷயங்களில் கவனம் செலுத்தி, உங்கள் திறமையின் மீது நம்பிக்கை வைத்து நீங்கள் செயல்பட்டால் அனைத்தும் உங்களுக்கு ஆதரவாக நடக்கும்” என்று கூறியிருக்கிறார். வருகிற ஒன்பதாம் தேதி நியூயார்கில் இந்திய பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.

