சிஎஸ்கே அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளராக தற்போது இலங்கையைச் சேர்ந்த மதீசா பத்திரானா மாறி இருக்கிறார். இவர் காயம் காரணமாக சிஎஸ்கேவை விட்டு வெளியேறும் நிலையில் உருக்கமான பதிவை வெளியிட்டு இருக்கிறார்.
சிஎஸ்கே அணியின் நட்சத்திர பந்துவீச்சாளராக திகழ்பவர் இலங்கையைச் சேர்ந்த மதீசா பத்திரானா. 150 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் பந்து வீசும் இவரது திறமையும், துல்லியமான லைன் அண்ட் லென்த்தும் மகேந்திர சிங் தோனிக்கு மிகவும் பிடித்த போயிருக்கிறது. மாற்று வீரராக களமிறங்கி இரண்டு போட்டிகளில் விளையாடிய இவர் அதற்குப் பிறகு சென்னை அணியில் இவரை நிரந்தர வீரராகவே மாற்றிக் கொண்டு விட்டது.
பெரும்பாலான போட்டிகளில் சிஎஸ்கேவிற்கு பந்துவீச்சில் முக்கிய பங்கு அளித்திருக்கிறார். எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையிலும் இவரிடம் பந்தை கொடுத்தாலும், தனது துல்லியமான பந்துவீச்சின் மூலம், எதிரணி வீரர்களை விரைவாக வெளியேற்றி தனது முத்திரையை பலமுறை பதித்திருக்கிறார். இந்த ஐபிஎல் தொடரிலும் சிறப்பாக செயல்பட்டு வந்த இவர், இதுவரை 6 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 13 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.
இந்த நிலையில் தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டிகளில் விளையாடாமல் வந்த பத்திரானா உலகக்கோப்பையை கருத்தில் கொண்டு இலங்கை கிரிக்கெட் வாரியம் திரும்ப அழைத்த காரணத்தினால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை விட்டு விலக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பத்திரானா சிஎஸ்கே குறித்தும், மகேந்திர சிங் தோனி குறித்தும் சில உருக்கமான தகவல்களை பகிர்ந்திருக்கிறார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது
“இது எனக்கு மிகவும் ஒரு நல்ல சீசனாக அமைந்திருக்கிறது. நான் இதுவரை ஆறு போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இருக்கிறேன். ஒரு போட்டியில் ஆட்டநாயகன் விருதும் வென்று இருக்கிறேன். நான் இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். நான் நிறைய முயற்சி செய்தேன். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மகிபாய் மற்றும் எனது பயிற்சியாளர்களிடமிருந்து நிறைய அனுபவங்களை கற்றுக் கொண்டேன்.
தற்போது என்னுடைய வாழ்க்கையில் சிஎஸ்கே அணி ஒரு மிகப்பெரிய பகுதியாக அமைந்திருக்கிறது. இந்த நிலையில் சிஎஸ்கே அணியை விட்டு விலகுவது எனக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது. இது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கிறது. நான் உங்களை விரைவில் சந்திப்பேன் என்று நம்புகிறேன். நான் சிஎஸ்கே அணிக்காக விளையாடியது சில வருடங்கள் இருந்தாலும் கூட, எனக்கு இங்கு நிறைய அன்பு கிடைத்திருக்கிறது.
இதையும் படிங்க:தோனி மே 12 ஓய்வா.?. தோனியின் பழைய வீடியோவால் கிளம்பிய சர்ச்சை.. பதறிப்போன சிஎஸ்கே ரசிகர்கள்
இங்குள்ள மக்கள் எனக்கு நிறைய ஆதரவை அளித்திருக்கிறார்கள். எனவே இந்த அன்பை நான் மீண்டும் திருப்பிக் கொடுக்க விரும்புகிறேன் என்று கூறியிருக்கிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை ஆறு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது இன்னும் மீதி 3 போட்டிகள் மீதம் இருக்கும் நிலையில், இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றால் சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விடும்.

