ஐபிஎல்லின் அடையாள நட்சத்திரமாக விளங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தற்போது காலில் ஏற்பட்ட தசைனார் கிழிவுடன் விளையாடி வருவதால் மே 12ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அவர் விளையாடும் கடைசி போட்டியாக இருக்கும் என்று கிரிக்கெட் வட்டாரத்தில் ஒரு தகவல் பரவி வருகிறது.
ஐபிஎல் கிரிக்கெட்டின் முடிசூடா மன்னனாக தற்போது விளங்கிவரும் சென்னை அணியின் மகேந்திர சிங் தோனி இதுவரை ஒரு வீரராகவும், ஐபிஎல் தொடரில் 226 போட்டிகளில் கேப்டனாகவும் விளையாடியிருக்கிறார். இந்த ஆண்டும் அவரே கேப்டனாக தொடர்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென தனது கேப்டன் பொறுப்பை ருத்ராஜிடம் ஒப்படைத்துவிட்டு தற்போது ஒரு அணி வீரராகவும், விக்கெட் கீப்பராகவும் மட்டுமே விளையாடிக் கொண்டிருக்கிறார்.
மேலும் கடந்த ஆண்டு அவர் செய்த கொண்ட அறுவை சிகிச்சை இந்த ஆண்டும் அவர் காயத்தில் இருந்து முழுமையாக குணமடையவில்லை என்பது போல தெரிகிறது. மேலும் தற்போது காலில் ஏற்பட்ட தசை நார் கிழிவுடன் விளையாடிக் கொண்டிருக்கிறார். மேலும் தோனிக்கு வயது ஏறிக் கொண்டே செல்வதால் இந்த ஆண்டு அவருக்கு கடைசி ஐபிஎல் தொடராக இருக்கும் என்று அனைவராலும் கூறப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடியுள்ள 11 போட்டிகளில் ஆறு போட்டிகள் வெற்றி பெற்று ஐந்து போட்டிகளில் தோல்வி அடைந்து புள்ளி பட்டியலில் தற்போது மூன்றாவது இடத்தில் உள்ளது. சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றில் தகுதி அடைய வேண்டுமானால் மீதம் இருக்கும் மூன்று போட்டிகளில் இரண்டு போட்டிகள் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். அப்படி வெற்றி பெறவில்லை எனில் மே 12ஆம் தேதியோடு சொந்த மண்ணில் சென்னை அணி விளையாடும் கடைசி போட்டியாக இருக்கும்.
மே 12ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்த நிலையில் மகேந்திர சிங் தோனி சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற சிஎஸ்கே நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர் எனது கடைசி ஐபிஎல் போட்டி கண்டிப்பாக சென்னையில்தான் நடைபெறும் என்று கூறினார். இது குறித்து அவர் விரிவாக கூறும்போது
” நான் எப்போதுமே எனது கிரிக்கெட்டை திட்டமிட்டு விளையாடுவேன். நான் விளையாடிய கடைசி ஒரு நாள் போட்டி எனது சொந்த ஊரான ராஞ்சியில் அமைந்தது.
எனவே என்னுடைய கடைசி டி20 கிரிக்கெட் போட்டி சென்னையில் நடைபெறும் என்று நம்புகிறேன். அது அடுத்த ஆண்டு இல்லை ஐந்து ஆண்டுகளில் நடைபெறலாம். ஆனால் அது குறித்து எங்களுக்கு தெரியாது” என்று கூறி இருக்கிறார். இந்த பேட்டி மகேந்திர சிங் தோனி 2021ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற சிஎஸ்கே விழாவில் கலந்து கொண்ட போது பேசியது.
இதையும் படிங்க:சொந்த காசுல சூனியம்.. உலகக்கோப்பையை இந்தியாவில் ஆஸ்திரேலியா வெல்ல முக்கிய காரணம் இதுதான்.. டேவிட் வார்னர் திடுக் தகவல்
எனவே தற்போது தோனி காயத்துடன் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி பெறுவதால் அதுவே இவருக்கு கடைசி ஐபிஎல் தொடராக இருக்கும் என்று ரசிகர்கள் தற்போது இந்த பேட்டியை வைரலாக்கி வருகின்றனர். ஒருவேளை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றால் இரண்டாவது அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டி சென்னையில்தான் நடைபெறுகிறது. எனவே இறுதிப் போட்டியோ அல்லது அரை இறுதிப் போட்டியோ மகேந்திர சிங் தோனிக்கு கடைசியா ஐபிஎல் போட்டியாக இருக்கலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது.
A promise from #Thala…#Anbuden awaiting… 💛🦁#WhistlePodu #Yellove pic.twitter.com/zGKvtRliOY
— Chennai Super Kings (@ChennaiIPL) November 20, 2021

