இந்தியன் பிரீமியர் லீக் என்று அழைக்கப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய 11 போட்டிகளில் ஆறு போட்டிகளில் வெற்றியும், 5 போட்டிகளில் தோல்வியும் தழுவி இருக்கும் நிலையில் சிஎஸ்கேவின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் விலகி இருப்பது அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் செயல்பாடு வெற்றி, தோல்வி என்று சரிசமமாக இருந்து வருகிறது. கடைசியாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்த பிறகு தரம்சாலாவில் நடைபெற்ற அதே பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பி இருக்கிறது.
இதுவரை மொத்தம் பதினொரு போட்டிகளில் விளையாடி அதில் ஆறு போட்டிகளில் வெற்றி பெற்று தற்போது புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. முதல் இரண்டு இடங்களில் முறைய ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணிகள் இருக்கும் நிலையில் மூன்றாவது அணியாக சென்னை அணி உள்ளது. சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமானால் இனி வரும் மூன்று போட்டிகளில் இரண்டு போட்டிகள் கட்டாயம் வெற்றி பெற வேண்டும்.
இந்த நிலையில் சென்னை அணி பேட்டிங் ஓரளவு கை கொடுத்தாலும் பெரும்பாலும் வந்து வீச்சை நம்பி சில போட்டிகளில் வெற்றி பெற்றது. தற்போது அதுவும் சென்னை அணிக்கு சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. சிஎஸ்கேவின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் ஆன தீபக்சகர் கடந்த பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியின் போது காயம் காரணமாக விலகினார். பின் வங்கதேசத்தை சேர்ந்த முஸ்தபிகுர் ரஹ்மான் சர்வதேச டி20 போட்டிகளில் பங்கேற்க இருப்பதால் அவர் சென்னை அணியை விட்டு விலகி சொந்த நாட்டிற்கு பயணம் மேற்கொண்டார்.
இந்த நிலையில் இலங்கை அணியைச் சேர்ந்த மற்றொரு வேகப்பந்து பேச்சாளரான மதீசா பத்திரனா சமீபத்தில் டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்பதற்கு விசாவை விண்ணப்பிப்பதற்காக இலங்கை சென்றார். தற்போது அதன் பணிகளை முடித்துவிட்டு மீண்டும் இந்தியா திரும்பிய அவர் நேற்று நடைபெற்ற போட்டியில் பங்கேற்கவில்லை. மேலும் அவருக்கு காலில் சிறிய தசை பிடிப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனால் அவர் உடல் நலனை கருத்தில் கொண்டு இலங்கை கிரிக்கெட் வாரியம் அவரை மீண்டும் இலங்கைக்கு அழைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகிறது. ஏனெனில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில் இலங்கை கிரிக்கெட் வாரியம் அவரது உடல் தகுதி மீது அக்கறை கொண்டுள்ளது.
இதையும் படிங்க:எனக்கு தோனியின் விக்கெட்டை கொண்டாட மனம் வரவில்லை.. அதற்கு காரணமே இது தான்.. உண்மையை விளக்கும் ஹர்சல் பட்டேல்
இலங்கை அணிக்காக பங்கேற்கும் முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக பத்திரனா கருதப்படுவதால் கிரிக்கெட் போர்டு இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகிறது. இதனால் சிஎஸ்கேவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் என பத்திரானாவின் விலகல் அணிக்கு சற்று பின்னடைவையை ஏற்படுத்தியுள்ளதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.

