சிஎஸ்கே மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியின் போது சிஎஸ்கேவின் மிக முக்கிய விக்கெட் ஆன மகேந்திர சிங் தோனியின் விக்கெட்டை பஞ்சாப் வீரர் ஹர்ஷல்ப பட்டேல் எடுத்தபோது அந்த வெற்றியை பெரிதாக அவர் கொண்டாடவில்லை. இதற்கான காரணத்தை தற்போது கூறி இருக்கிறார்.
பஞ்சாப் அணியின் சொந்த மைதானத்தில் நடைபெற்ற இப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் குவித்தது. சிஎஸ்கேவின் மற்ற வீரர்கள் விரைவாக ஆட்டமிருந்தாலும், கேப்டன் ருத்ராஜ் மட்டும் ஒரு முனையில் நிதானமாக விளையாடிக் கொண்டிருந்தார். அவருக்கு கம்பெனி கொடுத்த டேரி மிச்சல் 19 பந்துகளில் 30 ரன்கள் மொயின் அலி 20 பந்துகளில் 17 ரன்களும் குவித்தனர்.
பின்னர் சிஎஸ்கே அணியின் ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா இந்த போட்டியில் அற்புதமாக விளையாடினார். ஆட்டத்தின் சூழ்நிலையை புரிந்து கொண்ட ஜடேஜா எல்லா பந்துகளையும் அடிக்காமல் ஏதுவான பந்துகளை மட்டுமே பௌண்டரி மற்றும் சிக்ஸருக்கு விளாசினார். 26 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட ஜடேஜா மூன்று பவுண்டரிகள் இரண்டு சிக்சர்கள் என 43 ரன்கள் விலாசினார்.
கேப்டன் ருத்ராஜ் 32 ரன்கள் உடன் ஆட்டம் இழந்து களத்தை விட்டு வெளியேறினார். இதற்கு பின்னர் களம் இறங்கிய பஞ்சாப் அணி சிஎஸ்கே வீரர்களின் அபாரமான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 139 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்த ஆட்டத்தில் ஒரு முக்கியமான சம்பவம் நடைபெற்றது. சென்னை அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது 18-வது ஓவரில் மகேந்திர சிங் தோனி களம் இறங்கினார்.
அப்போது பந்து வீசிய ஹர்சல் பட்டேல் தான் வீசிய முதல் பந்தையே ஸ்லோயர் பந்தாக ஸ்டம்ப்புகளை நோக்கி தோனிக்கு வீச அதை அதை சற்றும் எதிர்பார்க்காத மகேந்திர சிங் தோனி கிளீன் போல்ட் முறையில் ஆட்டம் இழந்து வெளியேறினார். இந்தத் தொடரில் மகேந்திர சிங் தோனி முதல் முறையாக ஆட்டம் இழப்பது குறிப்பிடத்தக்கது. எனினும் தோனியின் விக்கெட்டை வீழ்த்திய பிறகு ஹர்சல் பட்டேல் அந்த வெற்றியை பெரிதும் கொண்டாடவில்லை. அமைதியான முறையிலேயே அதனை கடந்து சென்றார்.
சென்னை அணியின் பேட்டிங் முடிந்தபோது இது குறித்து விளக்கம் அளித்த ஹர்சல் பட்டேல் மகேந்திர சிங் தோனியின் மீது மிகப்பெரிய மரியாதை இருப்பதால் அவரின் விக்கெட் வீழ்த்திய பிறகு கொண்டாட மனம் வரவில்லை என்று கூறி இருக்கிறார். இது குறித்து அவர் மேலும் கூறும் பொழுது
“இன்று ஆடுகளம் மிகவும் ஈரப்பதம் இல்லாமல் வறண்டு காணப்பட்டது. அதனால் பந்து வீசுவதற்கு மிகவும் எளிதாக இருந்தது.
தோனியின் விக்கெட்டை வீழ்த்திய பிறகு அதனைக் கொண்டாட எனக்கு மனம் வரவில்லை. காரணம் அவர் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை இருக்கிறது” என்று கூறியிருக்கிறார். இவரின் இந்த கருத்தை கேட்ட தோனி மற்றும் சிஎஸ்கேவின் ரசிகர்கள் ஹர்சல் பட்டேலைக் கொண்டாடி வருகின்றனர்.

