ஆரஞ்சு தொப்பியை விராட் கோலியிடம் கொடுங்கள்.. ஆரஞ்சு தொப்பியை வாங்க நீங்கள் தகுதியற்றவர்.. ருத்ராஜை வம்புக்கு இழுக்கும் விராட் கோலி ரசிகர்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் சென்னை அணியின் கேப்டன் ருத்ராஜ் பஞ்சாப் அணிக்கு எதிராக 62 ரன்கள் குவித்ததன் மூலம் ஐபிஎல்லில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் விராட் கோலியை முந்தினார்.

- Advertisement -

தற்போது ஆரஞ்சு தொப்பி விராட் கோலியைத் தாண்டி ருத்ராஜ் வசம் சென்றுள்ள நிலையில், அவரை பிடிக்காத விராட் கோலி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவரை தரக்குறைவாக பேசிய நிலையில் இது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

- Advertisement -

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மகேந்திர சிங் தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகி ருத்ராஜ் வசம் ஒப்படைத்துள்ள நிலையில், அதற்குப் பிறகு ருத்ராஜின் பேட்டிங் முதல் சில ஆட்டங்களில் மிகவும் மந்தமாக இருந்தது. அதற்குப் பிறகு இவரது பேட்டிங் குறித்து பல விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் அபாரமாக சதம் விளாசி மீண்டும் தனது பழைய பேட்டிங் பார்முக்கு திரும்பினார்.

- Advertisement -

அதற்கு அடுத்த போட்டியில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 98 ரன்கள் குவித்தார். சென்னை அணியின் வெற்றி தோல்வியைத் தாண்டி இவரது பேட்டிங் பங்களிப்பு மட்டும் தொடர்ச்சியாக அணிக்கு நல்ல முறையில் வந்தது. சமீபத்தில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 62 ரன்கள் மூலம் இந்த ஐபிஎல் தொடரில் மொத்தமாக 509 தங்கள் குவித்து அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் விராட் கோலியை பின்னுக்கு தள்ளி முதல் இடத்திற்கு உயர்ந்தார்.

விராட் கோலி 500 ரன்கள் குவித்த நிலையில் இரண்டாவது இடத்திற்கு பின்னோக்கி நகர்ந்தார். இதனைக் கண்ட விராட் கோலி ரசிகர்கள் பிடிக்காமல், “மீண்டும் ஆரஞ்சு தொப்பியை விராட் கோலியின் வசமே ஒப்படையுங்கள், நீங்கள் ஆரஞ்சு தொப்பியை வாங்க தகுதியற்றவர்” என்பது போன்ற தர குறைவான வசனங்களை அவரது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட, அதனை கண்ட சிஎஸ்கே ரசிகர்கள் தற்போது ருத்ராஜக்கு ஆதரவாக தற்போது கமெண்ட்டுகளில் பேசி வருகின்றனர்.

- Advertisement -

ஐபிஎல்லில் அதிக ரன்கள் குவித்து முதல் இடத்தில் இருந்தாலும் டி20 உலக கோப்பை காண அணியில் இவரது பெயர் இடம் பெறவில்லை. இந்த ஐபிஎல் தொடரில் மோசமான பங்களிப்பை வெளிப்படுத்தி வரும் கில் இருக்கும்போது இவரது பெயர் எதற்காக இல்லாமல் போனது என்று முன்னாள் தேர்வு குழு தலைவர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இதையும் படிங்க:சாதனை படைத்த தமிழன்.. ஐபிஎல்லில் 100 விக்கெட்.. இவரை ஏன்யா டி20 உலக கோப்பைக்கு எடுக்கல?.

இது குறித்து ஸ்ரீகாந்த் கூறும்பொழுது
“இந்த டி20 உலக கோப்பை தேர்வு தற்போது குப்பைக்கு சமமாக இருக்கிறது. ஐபிஎல் தொடரில் மட்டுமல்லாமல் இந்திய அணியிலும் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்திய ருத்ராஜுக்கு வாய்ப்பை வழங்காமல், சுமாரான பங்களிப்பை வெளிப்படுத்தி வரும் கில்லுக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்படுவது எனக்கு ஏன் என்று புரியவில்லை” என்று தனது வருத்தத்தை தெரிவித்து இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles