சொல்பேச்சை கேட்காத கே எல் ராகுல்.. எச்சரித்த பிசிசிஐ.. ஐபிஎல்லில் இருந்து நீக்கமா?. காரணம் என்ன

17-வது இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் வெள்ளிக்கிழமை தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற நான்காவது போட்டியில் கே எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெய்ன்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.

- Advertisement -

முதலில் பேட் ஸதராஜஸ்தான் ராயல்ஸ் ani 20 ஓவர்கள் முடிவில் 193 ரன்கள் குவித்தது. அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாடி 82 ரன்கள் குவித்தார். பின்னர் 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெய்ன்ஸ் அணி 20 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

- Advertisement -

இதனால் 20 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் லக்னோ அணியின் கேப்டன் கே எல் ராகுலின் செயல்பாடு பிசிசிஐயைக் கடுப்படையை வைத்திருக்கிறது. இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில் பங்கு பெற்ற ராகுல் காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக முதல் போட்டியில் மட்டுமே பங்கேற்றார்.

- Advertisement -

பின்னர் இரண்டு மாதங்கள் ஓய்விற்கு பிறகு தேசிய கிரிக்கெட் அகாடமி அவரைப் பரிசோதனை செய்து, அவர் ஐபிஎல்லில் விளையாட உடத்தகுதியுடன் இருக்கிறார் என்று சான்று அளித்தது. அதுமட்டுமில்லாமல் விக்கெட் கீப்பிங் பணிகளில் ஈடுபட வேண்டாம் என்றும் கூறியுள்ளது.

லக்னோ அணியில் ஏற்கனவே டி காக் மற்றும் நிக்கோலஸ் பூரான் என்ற இரண்டு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இருக்கும் நிலையில் இன்று நடைபெற்ற ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கே எல் ராகுல் விக்கெட் கீப்பிங் பணியை மேற்கொண்டார். அணியில் விக்கெட் கீப்பர் இல்லாத காரணத்தினால் கே எல் ராகுல் விக்கெட் கீப்பிங் பணியை செய்தார் என்றால் பிசிசிஐ நிர்வாகம் கண்டுகொள்ளாது.

- Advertisement -

ஆனால் இரண்டு விக்கெட் கீப்பர்களை அணியில் வைத்துள்ள போதும் பிசிசிஐ அறிவுரையை மதிக்காமல் கீப்பிங்கில் ஈடுபட்டு இருக்கிறார். அணியில் ஏற்கனவே இசான் கிசான் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் பிசிசிஐ ரஞ்சித் தொடரில் விளையாட அறிவுறுத்திய போது அதனை மதிக்காமல் ஐபிஎல் தொடரில் விளையாட தயாராகி வந்த காரணத்தினால் அவர்களை சம்பளப் பட்டியலில் இருந்து நீக்கியது.

தற்போது கே எல் ராகுலும் அறிவுரையை ஏற்காத காரணத்தினால் அவர் ஐபிஎல் தொடரிலிருந்து நீக்கப்படுவாரா? என்பது குறித்து தெரியவில்லை. இருப்பினும் ஐபிஎல் தொடர் முடிந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. எனவே டி20 உலக கோப்பைத் தொடர் நெருங்கும் நிலையில் கேஎல் ராகுல் இவ்வாறு செய்வது நல்லதல்ல என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles