இவர்தாங்க ரொம்ப டேஞ்சர்.. களத்துல இருந்தா ஒண்ணுமே பண்ண முடியாது .. தோல்விக்கான காரணத்தை விளக்குகிறார் கம்மின்ஸ்

17-வது இந்தியன் பிரீமியர் கிரிக்கெட் லீக் போட்டியில் நேற்று நடைபெற்ற மூன்றாவது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின.

- Advertisement -

பெரும் தொகை கொடுத்து வாங்கப்பட்ட இரு அணி வீரர்களின் அணி மோதியதால் இந்த ஆட்டத்தில் எதிர்பார்ப்பு நிலவியது. டாசை இழந்து முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் குவித்தது. கொல்கத்தா அணியன் அதிரடி ஆல் ரவுண்டர் ஆண்ட்ரே ரசல் சில வருடங்களுக்குப் பிறகு மீண்டும் பார்முக்கு வந்தார். 25 பந்துகளில் மூன்று பவுண்டரி, ஏழு சிக்ஸர்கள் என 64 ரன்கள் குவித்து ஆட்டத்தின் போக்கையே மாற்றினார்.

- Advertisement -

பின்னர் 209 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு இறுதிக்கட்டத்தில் கிளாசன் எவ்வளவோ முயன்றும் கடைசியில் வெற்றி பெற முடியவில்லை. கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட கொல்கத்தா அணியின் ஹர்சித் ரானா 8 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து அதில் இரண்டு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

- Advertisement -

இதுவே ஆட்டத்தின் மிக முக்கிய திருப்புனையாக அமைந்து ஹைதராபாத் அணியின் தோல்விக்குக் காரணமாகவும் அமைந்தது. எனவே போட்டியில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணியின் ரசல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். தோல்வி குறித்து ஐதராபாத் அணியின் கேப்டன் கம்மின்ஸ் கூறுகையில்

“இந்தப் போட்டி மிக நெருக்கமாக வந்து இறுதி கட்டத்தில் தோற்றது. இப்போட்டி கிரிக்கெட் விளையாட்டுக்கு ஒரு சிறந்த போட்டியாக அமைந்து விட்டது. கொல்கத்தா அணியின் ரசல் அதிரடியாக விளையாடி ஆட்டத்தின் போக்கையே மாற்றி விட்டார். நாம் ஒரு திட்டத்துடன் வருவது போல் எதிரணியும் வேறொரு திட்டத்துடன் வந்து அதனை செயல்படுத்த முயற்சிப்பார்கள். ரசலுக்கு பந்து வீசுவது என்பது அவ்வளவு எளிதானதல்ல. டி20 கிரிக்கெட்டில் அவரைப் போன்ற வீரருக்கு பந்து வீசுவது கடினமான பணி.

- Advertisement -

அவருக்கு பந்து வீசும் போது எதிர் அணியினருக்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். நாங்கள் வெற்றிக்கு இவ்வளவு அருகில் வந்து தோல்வி அடைந்திருப்போம் என்று யாருமே எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். கிளாஸன் மற்றும் சபாஷ் அகமது இருவருமே வெற்றிக்கு அருகில் கொண்டு வந்து விட்டனர். கொல்கத்தா அணியின் சொந்த மண்ணில் களமிறங்கி மிகவும் பலம் வாய்ந்த அணிக்கு எதிராக விளையாடி இருக்கிறோம்.
எனவே இந்த தோல்வியின் மூலம் சில முன்னேற்றங்களை செய்ய வேண்டி உள்ளது. டாசின் போது எடுத்த முடிவு எனக்கு எந்த வருத்தமும் இல்லை. அடுத்த போட்டியில் நிச்சயம் மீண்டு வந்து வெற்றி பெறுவோம்” என்று கூறியிருக்கிறார்.

கொல்கத்தா அணியில் 24.75 கோடிக்கு வாங்கப்பட்ட ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் மிச்சல் ஸ்டார்க் நான்கு ஓவர்கள் பந்துவீசி 53 ரன்கள் விட்டுக் கொடுத்தார். இருப்பினும் அவரால் ஒரு விக்கெட் கூட வீழ்த்த முடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் தங்களது முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ள கொல்கத்தா அணி அடுத்த போட்டியிலும் இதே உத்வேகத்துடன் களமிறங்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles