என்ன மனுஷன்யா.. தெரியாம நடந்துருச்சு மன்னிச்சிரு.. ரிங்கு சிங் செய்த நிகழ்ச்சி விஷயம்.. காரணம் என்ன?

இந்திய அணி கிரிக்கெட்டரும், கொல்கத்தா அணியின் பினிஷருமான ரிங்கு சிங் பேட்டிங் பயிற்சியின் போது செய்துள்ள சம்பவம் ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளது. தற்போது அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

பல மூத்த வீரர்கள் இந்திய அணியில் இருந்து ஓய்வு பெறும் நிலையில், அவ்வப்போது இளம் திறமைகள் உள்ளே வந்து இந்திய அணியை மேலும் வலுப்படுத்துகின்றன. இப்படி 2023 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியில் நுழைந்தவர்தான் ரிங்கு சிங். இவர் இந்திய அணியில் கவனம் பெறுவதற்கு முன்னர் கொல்கத்தா அணிக்காக ஐபிஎல்லில் களமிறங்கினார்.

- Advertisement -

அப்போது குஜராத் அணிக்கு எதிரான ஒரு போட்டியில் கடைசி ஓவரில் 5 சிக்ஸர்களை விளாசி, அணியை வெற்றி பெறச் செய்ததுடன் யார் இந்த ரிங்கு சிங்? என்று கிரிக்கெட் வல்லுனர்கள், தேர்வாளர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழத் தொடங்கியது. அதற்குப் பிறகு இவர் கொல்கத்தா அணிக்காக ஆடிய ஒவ்வொரு ஆட்டமும் அதிரடி சரவெடிதான்.

- Advertisement -

அந்த அளவிற்கு பினிஷிங்கில் முக்கியத்துவம் கொடுக்கிறார் இந்த வீரர். மகேந்திர சிங் தோனியின் ஓய்விற்குப் பிறகு அவரது பினிஷிங் இடம் காலியாக இருந்த நிலையில், தற்போது இந்த இளம் வீரர் அவரது இடத்தை பூர்த்தி செய்து இருக்கிறார் என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியது. இருப்பினும் இந்த வார்த்தைகளை மிகைப்படுத்தும் விதமாக இவர் அடுத்து வரும் போட்டிகளில் விளையாடினால் இவர் இந்திய அணியின் ஜாம்பவானாக இருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.

கடந்த ஆண்டு கொல்கத்தா அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடிய இவர் 14 ஆட்டங்களில் விளையாடி 149 ஸ்டிரைக் ரேட் உடன் 474 ரன்கள் குவித்துள்ளார். மேலும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 15 ஆட்டங்களில் விளையாடி 356 ரன்கள் குவித்து இருக்கிறார். இவரது ஸ்டிரைக் ரேட் 179. அதாவது ஐபிஎல்லைவிட சர்வதேச கிரிக்கெட்டில் இவரது ஸ்ட்ரைக் ரேட் அதிகம். இப்படி ஃபினிஷிங்கில் தனக்கென ஒரு முத்திரையை பதித்து வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் வருகிற ஐபிஎல் சீசனுக்காக கொல்கத்தா அணியின் பயிற்சி முகாமில் கலந்து கொண்டு தற்போது பயிற்சியை மேற்கொண்டு வரும் ரிங்கு சிங், பயிற்சியின் போது ஸ்பின் பந்து வீச்சாளர் ஒருவர் வீசிய பந்தை நேராக தூக்கி அடிக்க, அங்கு விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுவன் மீது பந்து பட்டுள்ளது. அதனைக் கண்ட ரிங்கு சிங் அடுத்த நொடியே அந்த சிறுவனிடம் சென்று தலையில் அடிபட்டுள்ளதா? என்று விசாரித்து மன்னிப்பு கேட்டதுடன் தொப்பியில் தனது ஆட்டோகிராபை வழங்கியுள்ளார்.

இதனை வீடியோ எடுத்துள்ள கொல்கத்தா அணி நிர்வாகம் தனது X தளத்தில் பகிர்ந்துள்ளது. இதனைக் கண்ட ரசிகர்கள் ரிங்கு சிங்கின் செயல்பாட்டினை பாராட்டி இந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர். பொதுவாகவே ரிங்கு சிங் இளகிய மனம் படைத்தவர் என்று அனைவராலும் கூறப்பட்டு வருகின்ற நிலையில், இந்த வீடியோ அதனை உறுதிப்படுத்தி உள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles