தண்ணீரால் வந்த பிரச்சனை.. பெங்களூரில் ஐபிஎல் போட்டிகள் நடப்பதில் சிக்கல்.. ஏமாற்றத்தில் ஆர்சிபி ரசிகர்கள்

17 வது சீசனுக்கான ஐபிஎல் போட்டிகள் பெங்களூருவில் இருந்து வேறு இடங்களுக்கு மாற்றப்படலாம் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

- Advertisement -

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் வருகிற 22ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதன் முதல் போட்டி சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோத உள்ளன. இந்த போட்டிகளுக்கான அட்டவணை முதல் 15 நாட்களுக்கு மட்டும் வெளியாகி இருக்கிறது. பொதுத் தேர்தலின் காரணத்தினால் மீதமுள்ள போட்டிக்கான அட்டவணை இன்னும் சிறிது நாட்களில் வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

- Advertisement -

ஐபிஎல்-லை பொறுத்தவரை சென்னை மற்றும் மும்பை அணிக்கு அதிக ரசிகர் பட்டாளம் என்றால், அதற்கு சற்றும் சலிக்காத அளவுக்கு ஆர்சிபி அணிக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். அதற்கு மிக முக்கிய காரணம் இந்திய அணி நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி. சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு தோனி மற்றும் சச்சினை போல் பெங்களூரு அணிக்கு விராட் கோலி.

- Advertisement -

ஆரம்பத்தில் இருந்தே கோலி பெங்களூர் அணிக்காக மட்டுமே விளையாடி வருகிறார். இதனால் அவருக்கு அதிகளவு ரசிகர் பட்டாளம் இருக்கிறது என்று சொல்லலாம். சமீபத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விலகிய விராட் கோலி ஐபிஎல்லில் களமிறங்குவதற்கான அவரது ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

இந்நிலையில் அவர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் விதமாக பெங்களூருவில் தற்போது ஏற்பட்டுள்ள தண்ணீர் பற்றாக்குறை காரணமாக சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற இருந்த போட்டிகள் வேறு மைதானத்திற்கு மாற்றப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தண்ணீர் பற்றாக்குறை காரணமாக பெங்களூர் நகரத்தில் பள்ளி செல்லும் மாணவர்களுக்கும், ஐடி ஊழியர்களுக்கும் வீட்டிலிருந்தே கல்வி கற்கவும், பணி புரியவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் ஐடியில் பணிபுரியும் பெருமளவு ஊழியர்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கே செல்ல தொடங்கியுள்ளனர்.

- Advertisement -

இந்நிலையில் ஐபிஎல் போட்டிகள் நடத்த எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், மைதானத்தை பராமரிக்கவும் அதிக அளவு தண்ணீர் தேவைப்படுகிறது. கிட்டத்தட்ட ஏழு போட்டிகள் சின்னசாமி மைதானத்தில் நடைபெறுவதால் மைதானத்தினை பராமரிப்பதற்கு அதிக அளவு தண்ணீர் தேவைப்படும். இதனால் போட்டிகளை ஹைதராபாத் மற்றும் விசாகப்பட்டினத்திற்கு மாற்றப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

இருப்பினும் போட்டிகள் தொடங்க இன்னும் இரண்டு வாரங்கள் இருக்கும் நிலையில் தண்ணீர் பற்றாக்குறை தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் பெங்களூர் அணியின் ரசிகர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இதன் தொடக்கப் போட்டி சென்னையில் நடைபெறுவதால் தோனியைக் காண சென்னை ரசிகர்களும் கோலியைக் காண பெங்களூர் ரசிகர்களும் அதிக அளவு வருவார்கள் என்று நம்பப்படுகிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles