சிஎஸ்கே அணிக்கு மேலும் ஒரு நட்சத்திர வீரர் காயம்..அடி மேல் அடி..குழப்பத்தில் சென்னை அணி

ஐபிஎல் தொடங்க இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில், சிஎஸ்கே வீரர்கள் காயம் அடைந்திருப்பது சென்னை அணிக்கு சற்று சிக்கலை ஏற்படுத்தக் கூடிய வகையிலேயே உள்ளது. இந்நிலையில் தற்போது மேலும் ஒரு வீரர் காயம் அடைந்து இருப்பது சென்னை அணிக்கு அடி மேல் அடி விழத் தொடங்கியுள்ளது.

- Advertisement -

17வது ஐபில் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தற்போது தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சென்னை அணியின் கேப்டன் தோனி தற்போது அணியில் இணைந்து இருப்பது ரசிகர்களுக்கு கூடுதல் நற்செய்தி.

- Advertisement -

கடந்த முறை சாம்பியன் ஆன சென்னை அணிக்கு தற்போது வீரர்களின் காயம் புதிய கவலையை உண்டாக்கி வருகிறது. சென்னை அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சிவம் தூபே ரஞ்சி டிராபியில் நடைபெற்ற போட்டியின் போது காயமடைந்தார். இதனால் அவர் ஐபிஎல் தொடரில் பங்கேற்பது சந்தேகத்தை அளிக்கக்கூடிய நிலையில், மேலும் ஒரு பின்னடைவாக நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் காயம் அடைந்து அதிர்ச்சியை ஏற்படுத்தினர்.

- Advertisement -

ரச்சின் ரவீந்திரா மற்றும் டெவான் கான்வே ஆகியோர் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 போட்டியின் போது காயமடைந்திருந்தனர். ரச்சின் ரவீந்திராவின் காயம் கவலை அளிக்கக் கூடிய வகையில் இல்லாத நிலையில், மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான டெவான் கான்வேவிற்கு இடது கை பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்ததைத் தொடர்ந்து அவர் எட்டு வாரங்கள் வரை விளையாட மாட்டார் என்று நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.

இப்படி சென்னை அணிக்கு காயம் பெரும் சிக்கலை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், மற்றொரு வேகப்பந்து வீச்சாளரும் காயத்தில் சிக்கி இருப்பது தற்போது தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளரான மதிஷா பத்திரானாபங்களாதேஷ் அணிக்கு எதிரான டி20 தொடரின் இரண்டாவது போட்டியில் தனது ஸ்பெல்லின் கடைசி ஓவர் வீசும் போது தொடை வலியால் சிரமப்பட்டார்.

- Advertisement -

பின்னர் களத்தை விட்டு வெளியேறிய அவர், சிறிது நேரம் கழித்து அந்த வலியையும் பொருட்படுத்தாது தனது ஓவரை வீசத் தயாரானர். இருப்பினும் 3.4 வது ஓவரின் போது அவருக்கு வலி அதிகமாக இருந்ததால் போட்டியை விட்டு பாதியிலேயே வெளியேற நேர்ந்துள்ளது. பின்னர் காயத்தின் நிலையை அறிந்த இலங்கை கிரிக்கெட் வாரியம் அவர் இரண்டு வாரங்கள் வரை பங்கேற்க மாட்டார் என்று அறிவித்துள்ளது.

இதனால் பெங்களூர் அணிக்கு எதிரான முதல் போட்டியில் தோனியின் முக்கிய வேகப்பந்துவீச்சாளர் பங்கேற்காமல் போனது ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இருப்பினும் வங்காளதேச அணியைச் சேர்ந்த முஸ்தபிர் ரகுமான் தற்போது காயத்திலிருந்து குணமடைந்திருப்பது சற்று ஆறுதல் அளிக்கக்கூடிய செய்தியாகும். இருப்பினும் பத்திரனா விரைவில் காயத்திலிருந்து குணமாகி அணியில் இணைய வேண்டும் என ரசிகர்கள் வேண்டுகின்றனர்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles