சர்பராஸ் கான் கோல்டன் டக்.. சேவாக் மீது ரசிகர்கள் கோபம்.. நடந்தது என்ன.?

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடிய துருவ் ஜூரேலைப் பாராட்டியும், அதே நேரத்தில் சர்ப்ராஸ் கானை மறைமுகமாக விமர்சித்தும், இந்திய அணியின் முன்னாள் வீரர் ஷேவாக் டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

- Advertisement -

ராஞ்சியில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 353 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதை அடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்குத் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் தவிர, மற்ற வீரர்கள் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை. இந்நிலையில் அனுபவமே இல்லாத துருவ் ஜூரேல் முதல் இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடி 90 ரன்கள் குவித்து இந்திய அணி ரன்கள் குவிக்க உதவினார்.

- Advertisement -

அவரது உதவியுடன் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 307 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. துருவ் ஜூரேலின் ஆட்டம் குறித்துப் பலரும் பாராட்டி வரும் வேளையில் இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான வீரேந்திர சேவாக்
“ஊடகத்தில் ஜூரேல் பெயர் அதிகமாக வெளிவரவில்லை. எந்த ஒரு நாடகமும் இல்லை. மிகவும் கடினமான சூழ்நிலையில் இந்த திறமை நிதானமாக விளையாடி தன்னை நிரூபித்துள்ளது. துருவ் ஜூரேலுக்கு வாழ்த்துக்கள்” என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

- Advertisement -

நான்காவது டெஸ்டின் முதல் இன்னிங்சில் 14 ரன்கள் குவித்திருந்த சர்பராஸ்கான், இரண்டாவது இன்னிங்ஸின் முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி ஏமாற்றினார். இரண்டாவது இன்னிங்ஸில் சர்ப்ராஸ்கான் விளையாட வந்த போது ஆட்டத்தின் கடினமான நெருக்கடி மற்றும் சேவாக்கின் இந்த மறைமுகப் பதிவினால் சர்பராஸ்கான் நெருக்கடிக்கு மத்தியில் டக் அவுட் ஆனதாக ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த ட்வீட்டானது தற்போது வைரலாகி வருகிறது. அதாவது சர்பராஸ்கான் தனது திறமையை ஏற்கனவே ரஞ்சி டிராபியில் நிரூபித்து, தொடர்ந்து சிறப்பாகவும் விளையாடி வந்து, இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் காத்திருந்து அவருக்கு தற்போதுதான் வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. எனவே அவர் மீது ஊடக வெளிச்சம் பட்டதில் எந்த தவறும் கிடையாது.

- Advertisement -

துருவ் ஜுரேல் சில காலமே விளையாடினாலும், அவருக்கு தற்போது இந்திய அணியில் நேரடியாக வாய்ப்பு கிடைத்துள்ளது என்று சேவாக்கிற்கு ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த ட்ரீட் வைரலானதைத் தொடர்ந்து வீரேந்திர சேவாக் அதற்கு தற்போது விளக்கம் கொடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது

“யாரையும் இழிவுபடுத்தும் நோக்கில் நான் இதனைப் பதிவிடவில்லை. எல்லோர் மீதும் சமமான ஊடக வெளிச்சம் இருக்க வேண்டும். இந்த டெஸ்ட் தொடரில் சிலர் நன்றாக பந்து வீசி இருக்கிறார்கள். சிலர் நன்றாக பேட்டிங் செய்திருக்கிறார்கள். அவர்களுக்கு சமமான பாராட்டுக்கள் கிடைக்கவில்லை.

ஆகாஷ் தீப் நன்றாகப் பந்து வீசி இருக்கிறார். ஜெய்ஸ்வால் இந்தத் தொடரில் சிறப்பாக பேட்டிங் செய்திருக்கிறார். ராஜ்கோட் டெஸ்டில் சர்பராஸ்கானும், துருவ் ஜூரேலும் கிடைத்த வாய்ப்பை அருமையாகப் பயன்படுத்தி இருக்கின்றனர். அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்” என்று கூறி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles