அடி தூள்.. ஐபிஎல் 2024 தொடங்கும் நாள் அறிவிப்பு.. ஆனா 15 நாள் அட்டவணை தான் வரும்.. சேர்மன் தகவல்..என்ன காரணம்.?

2024ஆம் ஆண்டுக்கான 17 வது ஐபிஎல் சீசன் வரும் மார்ச் மாதம் 22 ஆம் தேதி தொடங்க உள்ளது என்று ஐபிஎல் தலைவர் அருண் துமால் உறுதிப்படுத்தியுள்ளார். எனினும் முதல் 15 நாட்களுக்கான போட்டி அட்டவணை மட்டுமே வெளியிடப்படும் என்றும் அதில் குறிப்பிட்டிருக்கிறார்.

- Advertisement -

ஐபிஎல்லின் 17வது சீசன் வரும் மார்ச் மாதம் தொடங்க உள்ளது. இதில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கடந்த சீசனில் இறுதிப்போட்டி வரை வந்து தோல்வியைத் தழுவிய கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் முதல் போட்டியில் மோதுகின்றன.

- Advertisement -

இதற்கான முழு அட்டவணையும் முன்னரே வெளியிடப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் இந்திய கிரிக்கெட் வாரியமும் ஐபிஎல் அட்டவணையை முழுவதுமாக வெளியிடாமல் அமைதி காத்து வருகிறது.

- Advertisement -

இதற்கு முன்னர் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலினால் ஐபிஎல் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடத்தப்பட்டது. அதற்குப் பின்னர் 5 ஆண்டுகள் கழித்து பொதுத் தேர்தலினால் ஐக்கிய அரபு எமிரேட்டில் போட்டிகள் ஓரளவு நடத்தப்பட்டது. இருப்பினும் 2019ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்ற போதிலும் இந்தியாவில் போட்டிகள் முழுமையாக நடத்தப்பட்டது.

இதனால் தற்போது பொதுத் தேர்தல் நடைபெற்றாலும் இந்தியாவிலேயே முழு போட்டியும் நடத்தப்படும் என்று ஐபிஎல் தலைவர் அருண் துமால் கூறியிருக்கிறார். இது பற்றிய அவர் விரிவாக கூறியதாவது
“நாங்கள் ஐபிஎல் அட்டவணையை வெளியிடுவதில் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். விரைவில் முதல் 15 நாட்களுக்கான போட்டி அட்டவணையை வெளியிடுவோம்.

- Advertisement -

மீதமுள்ள போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடுவதில் தற்போது அரசாங்கத்துடன் தொடர்பில் இருக்கிறோம். விரைவில் கலந்து ஆலோசித்து விட்டு முழு அட்டவணையையும் வெளியிடுவோம். ஆனால் தொடக்கப் போட்டிகள் விரைவில் நடத்தப்பட வேண்டும் என்ற கட்டாயத்தினால் தொடக்கப் போட்டிகள் குறித்து விரைவில் வெளியிடுவோம்.

மார்ச் 22ஆம் தேதி முதல் போட்டியும், மே 26 ஆம் தேதி இறுதிப்போட்டியும் இந்தியாவில் நிச்சயமாக நடைபெறும்” என்று கூறி இருக்கிறார். ஐபிஎல் முடிந்த சில நாட்களில் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறும் டி20 உலக கோப்பை ஜூன் 1ஆம் தேதி தொடங்க உள்ளது. அதில் முதல் போட்டியில் அமெரிக்காவும், கனடா அணியும் எதிர்கொள்கின்றன. இந்திய அணி ஐபிஎல் தொடரை முடித்துவிட்டு வரும் ஜூன் மாதம் 5ம் தேதி தனது முதல் போட்டியில் அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. அதன் பின்னர் 9ம் தேது தனது பரம எதிரியான பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles