ஏமாற்று தந்திர வேலை.. அஸ்வின் வேணும்னே பண்ணிருக்கார்.. அலைஸ்டர் குக் சாடல்.. நடந்தது என்ன.?

இங்கிலாந்து அணி தற்போது இந்திய அணிக்கு எதிராக மூன்றாவது டெஸ்டில் விளையாடிக் கொண்டிருக்கிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 445 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. மார்க் வுட் அதிகபட்சமாக நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

- Advertisement -

இந்தியா அணித் தரப்பில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சதாம் விளாசி இந்திய அணி கணிசமான ஸ்கோர் உயர உதவி செய்தனர். பின்னர் தனது முதல் இன்னிங்சைத் தொடங்கியுள்ள இங்கிலாந்து அணி தற்போது இரண்டு விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் குவித்துள்ளது.

- Advertisement -

முதல் இன்னிங்சில் பேஸ் பால் முறையை இங்கிலாந்து அணி மிகத் தீவிரமாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பென் டக்கட் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி ரன்களைக் குவித்து வருகிறார். ஆபத்தான பந்துகளை தடுத்தும், சுலபமான பந்துகளை அதிரடியாக விளையாடியும் 118 பந்துகளில் 21 பவுண்டரி, இரண்டு சிக்சர் உட்பட 133 ரன்கள் குவித்து களத்தில் இருக்கிறார்.

- Advertisement -

அவருக்கு பக்கபலமாக ஜோ ரூட் 9 ரன்கள் உடன் களத்தில் உள்ளார். இந்நிலையில் இந்திய அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது களத்தின் நடுவே ஓடியது தற்போது பேசு பொருளாக மாறி உள்ளது. இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் அலெஸ்டர் குக் போட்டியின் நடுவே அஸ்வின் ஓடியது குறித்து சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து அலெஸ்டர் குக் கூறியதாவது
“முதல் இன்னிங்ஸில் ரவிச்சந்திரன் அஸ்வின் கலத்தில் நடுவே ஓடியதை பார்த்தேன். இது வேண்டுமென்றே செய்யப்பட்டதா? என்று கேட்டால் ஆம் என்றே கருதுகிறேன். ஏனெனில் அஸ்வின் செய்தது ஒரு தந்திர யுக்தி. நீங்கள் களத்தில் இதுபோல தொந்தரவு செய்யலாம். அஸ்வின் பந்து வீசும் போது முடிந்த வரை உதவிகரமாக இருக்க விரும்புகிறார்.

- Advertisement -

இது குறிப்பாக மூன்றாவது இன்னிங்சில் நடக்கும். நீங்கள் 150 முதல் 200 ரன்கள் முன்னிலையில் இருக்கும்போது விக்கெட்டின் ஏற்ற இறக்கங்களை பற்றி அறிந்து கொள்ள இது போல் நடைபெறும். இது ஒரு தந்திரமான யுக்தி” என்று கூறி இருக்கிறார். இன்னும் மூன்று நாள் ஆட்டம் மீதம் இருக்கும் நிலையில் இங்கிலாந்து அணி தற்போது வலுவான நிலையை எட்டியுள்ளது.

எனவே இந்திய அணி விரைவிலேயே இங்கிலாந்து வீரர்களை ஆட்டமிழக்கச் செய்து வெற்றி பெறும் முனைப்பில் மிக தீவிரமாக ஆர்வம் காட்டி வருகின்றனர். பந்து தற்போது பேட்டிங்க்கு நன்கு ஒத்துழைக்கும் என்பதால் இங்கிலாந்து அணி முடிந்தவரை ரன்களை உயர்த்த முயற்சி செய்யும்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles