ரொம்ப கஷ்டமா இருக்கு.. உண்மையா ரன் அவுட்டுக்கு காரணம் யாருன்னா.. ரவீந்திர ஜடேஜா உருக்கம்.. மனம் மாறிய ரசிகர்கள்

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. இதில் டாசை இழந்த இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசி வருகிறது.

- Advertisement -

தொடக்கத்திலேயே இந்திய அணி முதல் மூன்று விக்கெட்டுகளை 34 ரன்களுக்கு இழக்க, பின்னர் கேப்டன் ரோஹித் சர்மாவுடன் இரண்டாவது போட்டியில் விளையாடாத ரவீந்திர ஜடேஜா இப்போட்டியில் களமிறங்கி அணியின் தூணாக இந்திய அணியின் விக்கெட் சரிவிலிருந்து தடுத்து நிறுத்தினார்.

- Advertisement -

சிறப்பாக விளையாடிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சதம் அடித்து மார்க் வுட்டின் பந்துவீச்சில் ஆட்டம் இழக்க, பின்னர் இந்திய அணியில் வாய்ப்புக்காக நீண்ட காலம் காத்திருந்த சப்ராஸ்கான் தனது அறிமுக போட்டியில் களமிறங்கினார். அவரது காத்திருப்புக்கு பலன் அளிக்கும் வகையில் எந்தவித பதட்டமும் இன்றி நிதானமாக பந்துகளை எதிர்கொண்டார்.

- Advertisement -

ஷார்ட் லெக், டூயல் மிட் விக்கெட், டீப் ஸ்கொயர் என இவருக்கு எதிராக இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை அமைத்து பந்துகளை வீசியது. இக்கடினமான சூழ்நிலையிலும் இந்த 26 வயதான இளம் வீரர் அனுபவ வீரரைப் போன்று மிக நேர்த்தியாக ஷாட்களை விளையாடினார்.

66 பந்துகளில் 9 பவுண்டரி, ஒரு சிக்சர் உடன் 62 ரன்கள் எடுத்து மறுமுனையில் நின்று கொண்டிருந்தார். எதிர் திசையில் பேட்டிங் செய்து கொண்டிருந்த ரவீந்திர ஜடேஜா மார்க் வுட் வீசிய பந்தினை எதிர்கொண்டு சர்பராஸ் கானை ஒரு ரன்னுக்கு அழைத்தார். ஜடேஜா கிரீசை விட்டு சில அடிகள் எடுத்து வைத்து பிறகு வேண்டாம் என்று கூறி விட, மறுமுனையில் பாதி தூரத்தினை கிடந்த சர்ப்ராஸ்கான் திரும்பி ஓட முடியாமல் இருக்க அதற்குள் மார்க் வுட் சர்ப்ராஸ் கானை ரன் அவுட் செய்தார்.

- Advertisement -

இதனால் தனது அறிமுக போட்டியிலேயே சதம் விளாசி சாதனை படைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜடேஜா செய்த தவறால் சர்ப்ராஸ் கான் ஏமாற்றத்துடன் வெளியேறினார். இதனைக் கண்ட இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கோபத்தில் தனது தொப்பியை வீசி எறிந்தார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகியுள்ளது.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 326 ரன்களில் 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இந்நிலையில் போட்டி முடிந்து வெளியேறிய பின்னர் ரவீந்திர ஜடேஜா தனது செயல் குறித்து ட்விட்டரில் வருத்தம் தெரிவித்தார். “நான் சர்ப்ராஸ்கானுக்காக வருத்தப்படுகிறேன். எனது தவறான அழைப்பினால் அவர் ஆட்டம் இழக்க நேர்ந்துது. மிகச் சிறப்பாக விளையாடினார்” என்று குறிப்பிட்டிருந்தார். ரவீந்திர ஜடேஜாவின் இப்பதிவு தற்போது சோசியல் மீடியாக்களில் வைரல் ஆகி வருகிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles