இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி சௌராஷ்டிராவில் ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
இதில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் களமிறங்க, ஜெய்ஸ்வால் 10 ரன்களில் அவுட் ஆகி நடையைக் கட்டினார். பின்னர் ஒன்டவுனில் குளம் இறங்கிய கில் 9 பந்துகளை சந்தித்த நிலையில் டக் அவுட் ஆகி வெளியேறினார். இவர்கள் இருவரின் விக்கட்டையும் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் வீழ்த்தினார்.
பின்னர் களம் இறங்கிய ராஜத் பட்டிதார் 5 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அடுத்ததாக களம் இறங்கிய ரவீந்திர ஜடேஜா ரோஹித் சர்மா உடன் கைகோர்த்து இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டார். 34 ரன்களுக்குள் 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்த நிலையில் இந்த ஜோடி கொஞ்சம் கொஞ்சமாக அணியைத் தூக்கி நிறுத்தியது.
இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியைக் கைவிட்டு சூழ்நிலைக்குத் தகுந்தவாறு மிகவும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதற்கிடையில் சரியான பந்துகளையும் அவர் கண்டிக்கத் தவறவில்லை. மிக நேர்த்தியாக விளையாடிய அவர் சதம் அடித்து அசத்தினார்.
196 பந்துகள் விளையாடிய அவர் 14 பவுண்டரி, மூன்று சிக்ஸர்கள் உடன் 131 ரன்கள் குவித்து மார்க் வுட்டின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். 237 ரன்களில் இந்திய அணி தனது நான்காவது விக்கெட்டைப் பறிகொடுத்தது. பின்னர் தனது அறிமுக போட்டியில் களம் இறங்கிய சர்ப்ராஸ் கான் முதல் போட்டியிலேயே தனது சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி அரை சதம் அடித்து அசத்தினார்.
62 ரன்களில் அவர் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர் முனையில் பேட்டிங் செய்து கொண்டிருந்த ரவீந்திர ஜடேஜா பேட்டிங் செய்துவிட்டு அவரை சிங்கிள் ரன்னுக்கு அழைக்க, மறுமுனையில் ஓடி வந்த சர்பராஸ் கான் எதிர்பாராத விதமாக மார்க் வுட்டால் ரன் அவுட் செய்யப்பட்டார். இதனை யாரும் எதிர்பார்க்கவில்லை.
சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் ரன் அவுட் ஆன விதம் ரோகித் சர்மாவை அதிர்ச்சியில் உள்ளாக்கியது. அவர் ரன் அவுட் ஆனதும் கோபத்தில் ரோகித் சர்மா தனது தொப்பியை வேகமாக கீழே எறிந்தார். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 326 ரன்கள் குவித்துள்ளது. இரண்டாவது போட்டி நாளை 9:30 மணிக்கு நடைபெற உள்ளது.
Rohit Sharma is unhappy with Selfish Ravindra Jadeja who ran out #SarfarazKhan.
— Amock (@Politics_2022_) February 15, 2024
Jadeja was too mean to betray a debutant. Nevertheless, Well Played Sarfu 🔥pic.twitter.com/oa3CoF8fxF

