மாஸ் கம்பேக்.. மீண்டும் மஞ்சள் ஜெர்ஸியில் ரெய்னா.. ஆனா சிஎஸ்கே இல்லை.. கேப்டன் பதவியால் ரசிகர்கள் உற்சாகம்

இந்தியாவின் வெற்றிகரமான விளையாட்டு வீரர்களில் ஒருவர் சுரேஷ் ரெய்னா. திறமையான பேட்ஸ்மேன் மட்டுமில்லாமல் மிகத் திறமையான பீல்டிங்கினால் உலகெங்கிலும் ரசிகர்களைக் கவர்ந்து உள்ளார். பந்து வீச்சிலும் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை அளிக்கும் அவர் இந்திய அணியின் வெற்றிகளுக்கு உறுதுணையாக இருந்தவர்.

- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியால் இந்திய அணியில் அறிமுகப்படுத்தப்பட்டார். தோனியின் நம்பிக்கைக்குறிய வீரரான இவர் ஐபிஎல்லில் சென்னை அணிக்காக விளையாடி சென்னை ரசிகர்களால் ‘சின்ன தல’ என்று அன்போடு அழைக்கப்படுபவர். இந்திய அணியில் இருந்து ஓய்வு பெற்ற இவர் சமீபத்தில் சென்னை அணியில் இருந்து ஓய்வினை அறிவித்தார்.

- Advertisement -

தற்போது இந்தியன் வெட்டரன் பிரீமியர் லீக் என்று டி20 கிரிக்கெட் தொடர் இந்திய மூத்த கிரிக்கெட் நிர்வாகத்தால் மேற்பார்வையிடப்பட்டு நடத்தப்படும் இத்தொடரானது பிப்ரவரி 23இல் தொடங்கி மார்ச் 3ம் தேதி வரை டேராடூனில் நடைபெற உள்ளது. இத்தொடரில் வீரேந்திர சேவாக், கிரிஷ் கெயில், யூசுப் தான், ரஜத் பாட்டியா, பிரவீன் குமார் என்று மூத்த கிரிக்கெட் வீரர்கள் இத்தொடரில் கலந்து கொண்டு விளையாட உள்ளனர்.

- Advertisement -

இத்தொடரில் தற்போது சுரேஷ் ரெய்னாவும் விளையாட இருக்கிறார். இந்த சீசனில் உத்தரப்பிரதேச அணிக்காக கேப்டனாகத் தலைமை தாங்க உள்ள இவர், மீண்டும் மஞ்சள் நிற ஜெர்சியை அணியத் தயாராகி உள்ளார். எனவே இவரது கேப்டன்சி மற்றும் பேட்டிங்கைக் காண ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் ஐவிபிஎல் இன் தலைவரான பிரவீன் தியாகி இந்திய மூத்த கிரிக்கெட் வீரர்கள் மூத்த கிரிக்கெட்டுக்கு புதிய ஆற்றலை புகுத்துவார்கள் என்று நம்புகிறேன். சுரேஷ் ரெய்னாவை ஐவிபிஎல் இன் குடும்பத்திற்கு வரவேற்கிறேன். அவரைக் காண ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து உள்ளனர் என்று நம்புகிறேன் என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து சுரேஷ் ரெய்னா கருத்து தெரிவிக்கையில்
“அனைவருக்கும் வணக்கம். நான் ஐவிபிஎல் இன் தொடரில் ஒரு பகுதியாக இருப்பதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். பல மூத்த கிரிக்கெட் வீரர்களுடன் உத்தரப்பிரதேச அணிக்காக விளையாடுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது” என்று தெரிவித்திருக்கிறார்.

உத்திரபிரதேச அணியில் ஐபிஎல் சாம்பியன் ரஜத் பாட்டியா மற்றும் ஆஸ்திரேலியா அணியைச் சேர்ந்த முன்னாள் ஆல்ரவுண்டர் டான் கிறிஸ்டியன் ஆகியோர் விளையாட உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பிப்ரவரி 23ஆம் தேதி தொடங்கும் இத்தொடரானது டேராடூனில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் அரங்கத்தில் நடைபெற உள்ளது. இதில் இந்திய வீரர்கள் மட்டுமின்றி பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் விளையாட உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles