ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா மகளிர் அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா மகளிர் அணியை வீழ்த்தி தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது. இப்போட்டியின் நடுவே ஒரு சுவாரசியமான சம்பவம் நடைபெற்றுள்ளது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க மகளிர் அணியினர் அங்கு மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் இரு போட்டிகளில் ஆஸ்திரேலியா அணி ஒரு வெற்றியும், தென்னாபிரிக்க அணி ஒரு வெற்றியும் பதிவு செய்தனர். இதில் தொடரை முடிவு செய்யப் போகும் மூன்றாவது போட்டி சிட்னி ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் டாசை வென்ற ஆஸ்திரேலியா மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதன்படி தொடக்க ஆட்டக்காரரான கேப்டன் அலெக்ஸ் ஹீலி சிறப்பாக விளையாடி 73 பந்துகளில் 9 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உடன் 63 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் லிட் ஃபீல்டு 5 ரன்களில் ஆட்டம் இழந்தாலும், மிடில் ஆர்டரில் களம் இறங்கிய மூனே 82 ரன்கள் குவித்து ஆஸ்திரேலியா அணியின் ஸ்கோர் கணக்கை உயர்த்தினார்.
பின்னர் களமிறங்கிய டி மெக்ராத் தனது பங்குக்கு 44 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். பின்னர் இறுதிக் கட்டத்தில் விளையாடிய ஆஸ்திரேலியா அணியின் அலானா கிங் 48வது ஓவரை மசபடா கிளாஸுக்கு எதிராக எதிர்கொண்டார். வேகப்பந்துவீச்சாளர் மசபடா பந்தை புல் டாஸ் ஆக வீச அதனை எதிர்கொண்ட அலானா கிங் பந்தை சிக்ஸருக்கு அடித்தவுடன் தனது சம நிலையை இழந்து பேட்டினை பின்னால் இருந்த ஸ்டம்ப்களில் அடித்து தடுமாறி கீழே விழுந்தார்.
இதனால் அலானாவுக்கு அவுட் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதனை பரிசோதித்த நடுவர் மசபடா பந்தினை நோபால் புல்டாஸ் ஆக வீசினார். இதனால் அவுட்டில் இருந்து விடுபட்டு அதனை நோ-பாலாக அம்பயர் அறிவித்தார். இதனால் ஆஸ்திரேலியா மகளிர் அணி 9 விக்கெட் இழப்புக்கு 50 ஓவர்களில் முடிவில் 277 ரன்கள் குவித்தது.
தென்னாபிரிக்க அணித் தரப்பில் கிளாஸ் 56 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் 278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி களமிறங்கியது. பேட்ங்கில் தடுமாறிய தென்னாப்பிரிக்கா அணி 14 ஓவர்களில் 63 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் மழையால் ஆட்டம் தடை பட்டது.
ஆஸ்திரேலியா அணித் தரப்பில் கிம் கரேத் மற்றும் தாலியா மெக்ரத் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். தென்னாப்பிரிக்க அணித்தரப்பில் லுஸ் அதிகபட்சமாக 34 ரன்கள் குவித்தார். இதனால் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி ஆஸ்திரேலியா அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-1 என கைப்பற்றியது.
What *hasn't* happened there?
— 7Cricket (@7Cricket) February 10, 2024
Alana King hits a six…from a waist-high no-ball…AND cleans up her own stumps in the process! 😅 #AUSvSA pic.twitter.com/5O2oHbQkfm

