நம்ப முடியல.. இது எப்படி அவுட்.. தப்பு பண்ணிட்டாங்க.. கொந்தளித்த பென் ஸ்டாக்ஸ் நடந்தது என்ன.?

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று முதல் போட்டியில் பெற்ற தோல்விக்குத் தற்போது பதிலடி கொடுத்துள்ளது. இதில் இங்கிலாந்து அணி வீரர் ஜாக் கிராவ்லி இரண்டாவது இன்னிங்ஸில் அவுட் ஆன விதம் சிறிது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 396 ரன்களும், இங்கிலாந்து அணி 253 ரன்களுக்கும் ஆல் அவுட் ஆனது. பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி 255 ரன்களுக்கு அணைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஃபார்ம் அவுட்டில் இருந்த கில் இரண்டாவது இன்னிங்ஸில் 104 ரன்கள் குவித்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

பின்னர் 399 ரன்கள் குவித்தால் வெற்றி என்று இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜாக் கிராவ்லி மட்டுமே நம்பிக்கை அளிக்கும் விதமாக விளையாடினார். மற்ற வீரர்கள் அனைவரும் பெரிதாக விளையாடவில்லை. இதில் கிராவ்லி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது குல்தீப் யாதவ் வீசிய பந்தை எதிர்கொண்டார். அப்போது பந்து கிராவ்லியின் பேடில் பட்டது.

- Advertisement -

இதனை எதிர்த்து இந்திய வீரர்கள் அப்பீல் செய்ய, நடுவர் அவுட் தர மறுத்து விட்டார். இதனால் இந்திய அணி டிஆர்எஸ் முறைக்குச் சென்றது. அப்போது ரிப்ளையில் காட்டப்பட்ட பந்து கிராவ்லியின் பேக் ஃபூட்டில் பட்டது. ஆனால் பந்து லெக் சைடில் செல்வது போல் தோன்றினாலும் ஸ்டம்புகளைத் தாக்கியது. இதனால் க்ராலிக்கு அவுட் கொடுக்கப்பட்டதை எதிர்த்து இங்கிலாந்து அணியின் கேப்டன் ஸ்டோக்ஸ் அதிருப்தி அடைந்துள்ளார்.

இங்கிலாந்து அணியின் தோல்விக்கு பிறகு இது குறித்து பேசிய பென் ஸ்டோக்ஸ்
“இரண்டாவது இன்னிங்ஸில் ஆட்டமிழந்த கிராவ்லியின் அவுட்டில் தொழில்நுட்பம் சரியான முடிவை எடுக்கத் தவறிவிட்டது. இந்த முடிவில் அதிருப்தி அடைகிறேன். இரண்டாவது இன்னிங்ஸில் களம் இறங்கும் போது இந்த இலக்கை எட்டி விடலாம் என்று நினைத்தேன். அழுத்தங்களில் நாங்கள் விளையாடும் பொழுதுதான் எங்களின் சிறந்த ஆட்டம் வெளிவருகிறது. டிரெஸ்ஸிங் ரூமில் உள்ள வீரர்கள் அனைவருமே தரமானவர்கள்.

- Advertisement -

எப்படிப்பட்ட அழுத்தங்களையும் அவர்களால் எளிதாக கையாள முடியும். ஆண்டர்சன் மற்றும் பும்ரா இருவரின் பந்து வீச்சு அபாரமாக இருந்திது. அவர்களது சிறந்த ஆட்டத்தை இந்த போட்டியில் வெளிப்படுத்தினார்கள்” என்று கூறினார். இப்போட்டியில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி தற்பொழுது தொடரை சமன் செய்துள்ளது. இன்னும் மூன்று போட்டிகள் எஞ்சி இருக்கும் நிலையில் இந்திய அணி வெற்றி பெற்றுத் தொடரைக் கைப்பற்றுமா? என்பதை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles