இனி சரிபட்டு வராது.. பணம் தான் முக்கியம்.. திடீரென ஓய்வை அறிவித்த ஆஸ்திரேலிய வீரர்

ஆஸ்திரேலியா அணிக்காக 15 ஆண்டுகளுக்கும் மேலாக விளையாடி வருபவர் டேவிட் வார்னர். இவரின் அசத்தலான ஆட்டம் காரணமாக ஆஸ்திரேலியா அணி 2015 மற்றும் 2023 உலகக்கோப்பையை வென்றுள்ளது. அதேபோல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையும் தொடரையும் ஆஸ்திரேலியா அணி வென்றது.

- Advertisement -

பாகிஸ்தான் அணிக்கு எதிரான சிட்னி மைதானத்தில் நடைபெறவுள்ள கிரிக்கெட் டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெற உள்ளதாக டேவிட் வார்னர் அறிவித்திருந்தார். இதனால் டேவிட் வார்னரின் கடைசி டெஸ்ட் போட்டியை பார்க்க ஆஸ்திரேலியா அணி ரசிகர்கள் பலரும் தயாராகி வந்தனர். இதுவரை 111 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 26 சதங்கள் உட்பட 8,635 ரன்களை விளாசியுள்ளார்.

- Advertisement -

இவர் குறித்து ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் மெக்டொனால்ட் பேசும் போது, ஆஸ்திரேலிய அணிக்காக 3 வடிவங்களிலும் ஆடிய வீரர்களில் டேவிட் வார்னர் மிகச்சிறந்த வீரர் என்று பாராட்டியுள்ளார். இந்த நிலையில் சிட்னி மைதானத்தில் டேவிட் வார்னர் பேசும் போது, ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்.

- Advertisement -

உலகக்கோப்பை தொடரின் போதே ஓய்வு குறித்து பேசி வருவதாகவும், இந்தியாவில் வென்றதே மிகப்பெரிய மைல்கல் என்று கூறினார். அதன்பின் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து திடீரென ஓய்வை அறிவித்ததற்கான காரணத்தை விளக்கினார். அதில், உலகம் முழுவதும் நடக்கும் டி20 லீக் தொடர்களில் பங்கேற்கவே ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன்.

அதேபோல் நான் ஓய்வு பெறுவதன் மூலமாக ஆஸ்திரேலிய அணி அடுத்தக்கட்ட அணியை தயார் செய்ய முடியும். எதிர்காலத்தையும் மனதில் வைத்தே முடிவு எடுத்துள்ளேன். சாம்பியன்ஸ் டிராபி 2025ஆம் ஆண்டு நடப்பதை நான் மறக்கவில்லை. அந்த நேரத்தில் நான் நல்ல பேட்டிங் ஃபார்மில் இருக்கும் பட்சத்தில், என்னை தேர்வு செய்தால் நிச்சயம் ஆஸ்திரேலியா அணிக்காக ஆடுவேன் என்று கூறியுள்ளார். 

- Advertisement -

இதனால் வரும் காலங்களில் டேவிட் வார்னர் ஆஸ்திரேலிய அணிக்காக டி20 கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடுவார் என்று தெரிய வருகிறது. இதுவரை ஆஸ்திரேலிய அணிக்காக 161 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய டேவிட் வார்னர், 6932 ரன்களை சேர்த்துள்ளார். டேவிட் வார்னரின் இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே ஐபிஎல், பிக் பேஷ் உள்ளிட்ட தொடர்களில் விளையாடி வரும் டேவிட் வார்னர், இனி பிஎஸ்எல், ஐஎல்டி20 லீக், எம்எல்சி டி20 தொடர்களிலும் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles