சாய் சுதர்சன் என்னை ஆடவே விடல.. மூணு ஓவர்ல பவுண்டரி அடிக்கலனா எப்படி ஜெயிக்கிறது – கில் வருத்தம்

நேற்று ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த தோல்விக்கான காரணம் என்ன என்பது குறித்து கேப்டன் சுப்மன் கில் பேசியிருக்கிறார்.

- Advertisement -

இந்த போட்டியில் பவர் பிளேவில் சாய் சுதர்சன் அதிகப்படியான பந்துகளை விளையாடினார். கில் விளையாடுவதற்கு மிகச் சில பந்துகள் மட்டுமே கிடைத்தது. இதனால் தனிப்பட்ட முறையில் அவரால் ரன் வேகத்தை அதிகரித்துக் கொள்ள முடியவில்லை. மேலும் இறுதிக்கட்ட ஓவர்களில் குஜராத் அதிரடியாக விளையாடவில்லை.

- Advertisement -

இதுகுறித்து பேசி உள்ள கில் கூறும் போது ” நாங்கள் 16 முதல் 19 ஓவர்களில் ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை. இதனால் நாங்கள் நினைத்த இலக்கை போய் அடைய முடியவில்லை. பந்து வீச்சில் சரியான ஏரியாக்களில் வீசவில்லை. அதே சமயத்தில் அவர்கள் மிடில் ஓவர்களில் அட்டாக் செய்து சிறப்பாக விளையாடினார்கள்”

- Advertisement -

“மேலும் சாய் சுதர்சன் கடந்த இரண்டு போட்டிகளாக ஆட்டம் இழந்த விதம் வருத்தம் அளிப்பதாக இருந்தது. ஆனால் தற்போது அவர் அதை திருத்திக் கொண்டு சதம் அடித்தது மகிழ்ச்சி. ஆனால் அடுத்த போட்டியில் பவர் பிளேவில் எனக்கு விளையாட வாய்ப்பு கொடுப்பார் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles