ரோகித் 15 வருஷத்துக்கு முன்ன அவங்களுக்காக உனக்கு தப்பு பண்ணிட்டேன்.. என்னை நீ மன்னிச்சிடு – ஸ்ரீகாந்த் உருக்கம்

இந்திய முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவிடம் இந்திய முன்னாள் தேர்வு குழு தலைவர் ஸ்ரீகாந்த் வெளிப்படையாக மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்கிறார்.

- Advertisement -

2011 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இந்திய அணிகள் ரோஹித் சர்மாவை திடீரென ஸ்ரீகாந்த் தலைமையிலான இந்தியத் தேர்வுக் குழு தேர்வு செய்யவில்லை. இந்த சம்பவம் தன்னை கடுமையாக பாதித்ததாக தற்போதும் கூட ரோகித் சர்மா கூறி வருகிறார்.

- Advertisement -

இதுகுறித்து ஸ்ரீகாந்த் பேசும்போது “நான் இந்த விஷயத்திற்காக இப்போதும் வருத்தப்படுகிறேன். இதற்காக கடந்த ஆண்டு நான் ரோகித் சர்மாவிடம் நேரடியாக மன்னிப்பு கேட்டேன். அரை ஆல்ரவுண்டர்களை தேர்வு செய்வதற்காக இவரை விட வேண்டியது ஆகப் போய்விட்டது”

- Advertisement -

“அந்த உலகக் கோப்பை தொடரில் இறுதியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அரை ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங்தான் கதாநாயகனாக வந்தார். மேலும் சச்சின் சேவாக், ரெய்னா, யூசுப் அதான் போன்றவர்கள் பலர் பந்து வீசினார்கள். எனவே என்னால் ரோஹித் சர்மாவுக்கு ஒரு இடத்தை இந்திய அணியில் அப்போது கண்டுபிடிக்க முடியவில்லை” என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles