இந்த ஐபிஎல் தொடரில் கடந்த இரண்டு போட்டிகளாக விராட் கோலி மிகவும் மெதுவாக ரன்கள் எடுப்பதாக இர்பான் பதான் கூறியிருக்கிறார்.
நேற்று விராட் கோலி பவர் பிளேவில் 20 பந்துகளை சந்தித்து விளையாடி அதிரடியாக 200 ஸ்டிரைக் ரேட்டில் 40 ரன்கள் எடுத்தார். அதற்கு அடுத்து அவர் ஒன்பது ரன்கள் எடுப்பதற்கு 14 பந்துகள் தேவைப்பட்டது.
இதுகுறித்து இர்பான் பதான் பேசும்போது ” விராட் கோலி கடந்த இரண்டு போட்டிகளாக ரன் எடுக்கும் வேகம் மிகவும் மெதுவாக இருந்து வருகிறது. அவர் 20 பந்துகளில் 40 ரன்கள் எடுத்துவிட்டு, அடுத்த 9 ரன்னுக்கு 14 பந்துகளை எடுத்துக் கொண்டார். அவர் ஏதோ காயத்தில் இருக்கிறார் போல என்று நான் நினைக்கிறேன்”
“அதே சமயத்தில் ஆரஞ்சு தொப்பியையும் அவரையும் பிரிக்க முடியாது. இந்த சீசன் தொடங்குவதற்கு முன்பாகவே நிச்சயம் விராட் கோலி இளம் வீரர்களுடன் ஆரஞ்சு தொப்பிக்கான போட்டியில் இருப்பார் என்று சொன்னேன். இப்பொழுது அதை கைப்பற்றி இருக்கிறார்” என்று கூறி இருக்கிறார்.

