இன்று ஆர்சிபி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக்கொள்ளும் முக்கிய போட்டி நடப்பு ஐபிஎல் தொடரில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கு முன்பாக மும்பை இந்தியன்ஸ் அணியின் பலம் மற்றும் பலவீனம் குறித்து அஸ்வின் பேசியிருக்கிறார்.
நடப்பு ஐபிஎல் தொடரை வெற்றியுடன் ஆரம்பித்த மும்பை இந்தியன்ஸ் சனி அடுத்தடுத்து இரண்டு தோல்விகளை சந்தித்து நம்பிக்கை இழந்து காணப்படுகிறது. சிறந்த அணியை வைத்திருந்த போதும் வெற்றியை ஒருங்கிணைக்க முடியாமல் தடுமாறி வருகிறது.
இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்போது ” தற்போது பலமான பேட்டிங் லைன் அப் இருக்கின்ற காரணத்தினால் மும்பை இந்தியன்ஸ் அணி ரோகித் சர்மாவை நம்பி இல்லை. இது அவரது பெருமையை காயப்படுத்தவே செய்யும். ஆனால் உண்மை சூழ்நிலை இதுதான்”
“அதே சமயத்தில் அவர்களுக்கு தற்போது பெரிய பிரச்சனை பௌலிங் யூனிட்தான். குறிப்பாக நல்ல சுழல் பந்துவீச்சு இல்லை. மேலும் பும்ராவுக்கு சப்போர்ட் யாரும் செய்வதில்லை. அவர்களுடைய தொடக்க பவுலர்கள் சிறப்பாக செயல்படவில்லை இதுதான்” பிரச்சனை என்று கூறியிருக்கிறார்.

