சிஎஸ்கே செய்த தவறால் தோற்ற மும்பை இந்தியன்ஸ்.. வெளுத்துவிட்ட சின்ன பையன்.. டெல்லி வெற்றி

இன்று ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வென்று இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தற்காலிக கேப்டன் சூர்யா குமார் யாதவ் 36 பந்துகளில் 51 ரன்கள், ரோகித் சர்மா 26 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார்கள். அந்த அணி 20 ஓவரில் ஆறு விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

இதைத் தொடர்ந்து விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு பதும் நிசாங்கா 30 பந்துகளில் 40 ரன்கள், ஒருமுனையில் அதிரடியாக விளையாடிய இளம் வீரர் சமீர் ரிஸ்வி 50 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் ஏழு சிக்ஸர்கள் உடன் 90 ரன்கள் குவித்தார்கள். இதைத் தொடர்ந்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

- Advertisement -

இந்த போட்டியில் 90 ரன்கள் எடுத்த சமீர் ரிஸ்வியை சிஎஸ்கே அணி முதல்முறையாக 8.2 கோடி ரூபாய்க்கு வாங்கி இருந்தது. ஆனால் அவரை ஒரே சீசனில் கழட்டி விட்டது. இதைத் தொடர்ந்து டெல்லி அவரை 95 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கியது. இவர் டெல்லி அணிக்கு முதல் இரண்டு போட்டிகளிலும் அதிரடி அரை சதம் அடித்து வெற்றி பெற்று கொடுத்து ஆரஞ்சு தொப்பியையும் கைப்பற்றி விட்டார். சி எஸ் கே செய்த தவறு இப்போது மும்பை இந்தியன்ஸ் அணியை தோல்வியடைய வைத்திருக்கிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles