வீடியோ: புது சர்ச்சை.. ருத்ராஜை ஏமாற்றினாரா கில்.?.. கடைசி நொடியில் மாறிய முடிவு.. ரசிகர்கள் குழப்பம்

17 வது ஐபிஎல் சீசன் ஏழாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இந்நிலையில் டாசின் போது கில் செய்த செயல் ரசிகர்களிடையே சற்றுக் குழப்பத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

- Advertisement -

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் சென்னை அணி தற்போது முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இதன்படி அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ருத்ராஜ் கெயிக்வாட் மற்றும் சச்சின் ரவீந்திரா ஆகியோர் களமிறங்கினர்.

- Advertisement -

ரச்சின் ரவீந்திரா ஆரம்ப முதலே அதிரடியாக விளையாடி குஜராத் அணியின் பந்துவீச்சை நொறுக்கினார். சுழற்பந்து வீச்சு வேகப்பந்து வீச்சு என எதிலும் பாரபட்சம் காட்டாத அவர் 20 பந்துகளில் ஆறு பவுண்டரிகள், மற்றும் மூன்று சிக்சர்களை விளாசி 46 ரன்கள் குவித்த நிலையில் எதிர்பாராத விதமாக ரசித் கானின் பந்துவீச்சில் சகாவிடம் ஸ்டம்பிங் முறையில் ஆட்டம் இழந்து வெளியேறினார்.

- Advertisement -

மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான கேப்டன் ருத்ராஜ் 46 ரன்களுக்கு குவித்த நிலையில் ஸ்பின்சர் ஜான்சனின் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். தற்போது களமிறங்கியிருக்கும் சிவம்தூபே மற்றும் டாரி மிச்சல் ஆகிய இருவரும் அதிரடியாக விளையாடி வருகின்றனர். அதில் முக்கியமாக சிவம் தூபே குஜராத் அணியின் சுழற் பந்துவீச்சு நொறுக்கிக் கொண்டிருக்கிறார். தற்போது சென்னை அணி 184 ரன்கள் குவித்து நான்கு விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது.

இந்நிலையில் டாசின் போது குஜராத் அணியின் கேப்டன் கில் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். பிறகு திடீரென தனது முடிவை சட்டென்று மாற்றி பந்து வீசுவதாக அறிவித்திருக்கிறார். இதனைக் கண்ட ருத்ராஜ் சிரித்துக் கொண்டபடியே நாங்கள் பேட்டிங் செய்து கொள்கிறோம் என்று அறிவித்தார்.

- Advertisement -

பிறகு ஏன் இந்த முடிவை மாற்றினீர்கள் என்று கில்லிடம் கேட்க நாங்கள் மும்பை அணிக்கு எதிராக இரண்டாவது இன்னிங்சில் பந்துவீசி உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் சோர்வடைந்திருக்கிறோம். அதனால் இப்போது முதலில் பந்து வீசி கொள்கிறோம். இதற்குப் பிறகு எங்களுக்கு ஓய்வு எடுக்கப் போதிய நேரம் இருக்கிறது. அதனால் இது குறித்து கவலை இல்லை என்று கூறி இருக்கிறார்.

குஜராத் கேப்டனின் செயலை கண்ட ரசிகர்கள் ருத்ராஜை கில் ஏமாற்றினாரா? கடைசி நொடியில் எதற்காக இந்த முடிவை மாற்றினார் என்று ரசிகர்கள் புரியாமல் குழம்பி வருகின்றனர். இருப்பினும் மகேந்திர சிங் தோனியின் பேட்டங் காண ரசிகர்கள் தற்போது ஆர்வமாக இருக்கின்றனர்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles