ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 219 ரன்களை விளாசியது. கடைசி நேரத்தில் களமிறங்கிய ஷஷாங்க் சிங் 30 பந்துகளில் 59 ரன்களை விளாசி அசத்தினார்.
இதன்பின் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 209 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலமாக பஞ்சாப் அணி 17 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இதன் மூலம் கிட்டத்தட்ட பஞ்சாப் அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு உறுதியாகி இருப்பதாக பார்க்கப்படுகிறது.
ஸ்ரேயஸ் ஐயருக்கு காயம்
இந்த போட்டியில் பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் 2ம் பாதியில் களமிறங்கவில்லை. இதனால் பொறுப்பு கேப்டனாக ஷஷாங்க் சிங் செயல்பட்டார். இதுகுறித்து ஸ்ரேயஸ் ஐயர் பேசும் போது, 2ம் பாதி ஆட்டத்தில் களமிறங்காததற்கு என் விரலில் ஏற்பட்ட காயமே காரணம். விரலுக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. நேற்று பயிற்சியின் போது என் விரலில் அடிபட்டது.
இதனால் போட்டிக்கு பின் விரலில் என்ன மாதிரி காயம் ஏற்பட்டுள்ளது என்பதை பார்க்க வேண்டும். 2ம் பாதியில் களமிறங்காத போது, பாசிட்டிவான உடல்மொழியுடன் அனைவரும் இருக்க வேண்டும் என்பதை மட்டுமே வலியுறுத்தினேன். சில நேரங்களில் ஆட்டம் நம் கைகளில் இருந்து நழுவும் போது, தோல்வி உறுதி என்ற எண்ணம் வரும். ஆனால் இந்த போட்டியில் ஒவ்வொரு வீரரை நினைத்தும் பெரும் கொள்கிறேன்.
இதுதான் பஞ்சாப் அணி
அதேபோல் ஹர்ப்ரீத் பரார் மிகச்சிறப்பாக விளையாடினார். வலைப்பயிற்சியில் தொடர்ந்து பயிற்சியில் இருப்பவர் அவர். சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று நம்பிக்கைய்டுஅன் இருப்பார். இந்த வாய்ப்புக்காக பசியுடன் காத்திருந்தார். அதற்கேற்ப இன்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிபெற வைத்துள்ளார். அவருக்கு என் வாழ்த்துகள். அதேபோல் நம்பிக்கையுடன் இருக்கிறார்.
ஒரு சிறிய பிரேக்கிற்கு பின் மீண்டும் வீரர்கள் வந்துள்ள போதும், அதீத நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். அதேபோல் ஒரு வார ஓய்வு எங்களுக்கும் தேவையாக இருந்தது. அதேபோல் ஆட்டம் ஒரு கட்டத்தில் கைகளை மீறி சென்றாலும், கம்பேக் கொடுத்து வென்றுள்ளோம். இந்த போட்டியில் ஸ்பின்னர்களை எதிர்த்து எங்களால் ரன்களை சேர்க்க முடியவில்லை. அதனை வரும் போட்டிகளில் சரிசெய்வோம் என்று தெரிவித்தார்.

