“357 இல்லாம 17 ரன் கம்மியா கொடுத்திருந்தா ஜெயிச்சிருப்போம்” – 190 ரன் வித்தியாச தோல்விக்கு பின் நியூசிலாந்து கேப்டன் விசித்திர பேச்சு.!

இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரின் 32 வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

- Advertisement -

முதலில் பேட்டிங் செய்த சவுத் ஆப்பிரிக்கா அணி 50 ஓவர்களில் அதிரடியாக விளையாடி 357 ரன்கள் குவித்து நான்கு விக்கெட்டுகள் மட்டுமே இழந்தது. அந்த அணியின் குயிண்டன் டிகாக் மற்றும் ரசி வாண்டர் டுசன் இருவரும் அபாரமாக ஆடி சதம் அடித்தனர். இதனைத் தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணி 167 ரன்கள் 35 ஓவர்களிலேயே ஆல் அவுட் ஆனது.

- Advertisement -

அந்த அணியின் மூன்று வீரர்களைத் தவிர மற்ற வீரர்கள் வெறும் ஒற்றை இலக்கரங்களில் ஆட்டம் இழந்தது குறிப்பிடத்தக்கது. இந்த தோல்வியின் மூலம் நியூசிலாந்து அணி புள்ளிகள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்து நான்காவது இடத்திற்கு பின்தங்கி இருக்கிறது. மேலும் நியூசிலாந்து அணிக்கு அடுத்து நடைபெற இருக்கும் இரண்டு போட்டிகளையும் வெற்றி பெறவேண்டிய நெருக்கடியும் ஏற்பட்டிருக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் அந்த அணியின் கேப்டன் டாம் லேதம் போட்டிக்கு பின் பேசியபோது இன்னும் ஒரு 10 முதல் 17 ரன்கள் குறைவாக கொடுத்திருந்தால் நாங்கள் வெற்றி பெற்றிருப்போம் என தெரிவித்திருக்கிறார். மேலும் இந்த போட்டியில் தங்களது பேட்டிங் மிகவும் மோசமாக இருந்ததை ஏற்றுக்கொண்ட அவர் இனி வரும் போட்டிகளில் கவனத்துடன் விளையாடி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் தங்களது அணி இருப்பதையும் சுட்டி காட்டினார்.

இது தொடர்பாக பேசிய நியூஸிலாந்து அணியின் கேப்டன் ” இந்தப் போட்டியில் மிகவும் மோசமாக விளையாடியதை ஏற்றுக் கொள்கிறோம். தென்னாப்பிரிக்க அணியின் குயின்டன் டிகாக் மற்றும் வாண்டார் டுசன் ஆகிய இருவரும் எங்களைக் கடும் அழுத்தத்திற்கு உள்ளாக்கினர். எங்களது பேட்டிங்கின் போது துவக்கத்திலேயே 5 விக்கெட் இழந்தது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. இந்த ஆடுகளத்தில் முதலில் பேட்டிங் செய்வது சரியான அணுகுமுறை என நான் நினைக்கவில்லை. ஆடுகளம் இரண்டு பேட்டிங்க்கும் சமமான வகையில் இருந்தது” என தெரிவித்தார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” சவுத் ஆப்பிரிக்கா அணியை 330-340 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி இருந்தால் நாங்கள் வெற்றி பெற்று இருக்கலாம். எனினும் நாங்கள் எங்களது பேட்டிங்கை திறம்பட செய்யவில்லை. வீரர்கள் அடுத்தடுத்து காயங்களுக்கு உள்ளாகி இருப்பது வருத்தமான ஒன்று. எனினும் அடுத்த போட்டிகளுக்குள் அவர்கள் தயாராகிறார்களா என்று பார்க்க வேண்டும். இந்த இரண்டு போட்டிகளின் தோல்வி எங்களுக்கு சில கேள்விகளை எழுப்பி இருக்கிறது. அவற்றிற்கு விரைவில் தீர்வு கண்டுபிடித்து பெங்களூர் போட்டிக்கு தயார் ஆகுவோம்” என தெரிவித்திருக்கிறார்.

நியூசிலாந்து துவக்கத்தில் அதிரடியாக சில வெற்றிகளை பெற்றாலும் தற்போது அடுத்தடுத்த மூன்று போட்டிகளில் இந்தியா ஆஸ்திரேலியா மற்றும் சவுத் ஆப்பிரிக்கா அணிகள் இடம் தோல்வியை சந்தித்துள்ளது. இதன் காரணமாக அந்த அணியின் அரையிறுதி வாய்ப்பிற்கு தற்போது சிக்கல் உருவாகி இருக்கிறது. இந்தப் போட்டியில் பெற்ற மோசமான தோல்வியின் மூலம் நெட் ரன் ரேட் அடி வாங்கி இருப்பதால் மீதி இருக்கும் இரண்டு போட்டிகளையும் கட்டாயம் இன்றே ஆக வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறது நியூசிலாந்து.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles