ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் சிஎச்கே அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய கேகேஆர் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்களை சேர்த்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய சிஎஸ்கே அணி 19.4 ஓவர்க்லளில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்த வெற்றியால் சிஎஸ்கே அணி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இந்த வெற்றிக்கு பின் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி பேசும் போது, நாங்களில் சில போட்டிகளை வென்றுள்ளோம். இந்த சீசனில் சிஎஸ்கே அணி பெறும் 3வது வெற்றியாகும். நிச்சயமாக வெற்றி பெறும் அணியாக இருப்பது நன்றாக இருக்கிறது. இந்த சீசனில் நாங்கள் எதிர்பார்த்தபடி சில விஷயங்கள் நடக்கவில்லை.
அதற்கான எமோஷனலாக முடிவு எடுக்காமல், கொஞ்சம் எங்கு தவறு நடந்தது என்று பார்க்க வேண்டும். சிஎஸ்கே அணியில் 25 வீரர்களை நிரப்ப முடியும். இப்போதைய கவனம் அதில் மட்டுமே உள்ளது. அடுத்த சீசனுக்கான கேள்விக்கு எங்களுக்கு பதில் தேவைப்படுகிறது. எந்த பேட்ஸ்மேன் எந்த இடத்தில் களமிறங்க முடியும், எந்த பவுலரால் எந்த சூழலில் பவுலிங் செய்ய முடியும் என்பதை அறிய வேண்டும்.
இளம் வீரர்கள்
இந்த சீசனில் பெரிய ரன்களை பேட்ஸ்மேன்கள் அடிக்கவில்லை. சில நேரங்களில் ஆட்டமிழந்த போதும், நம் மீது நம்பிக்கை வைத்து தேவையான ஷாட்களை விளையாட வேண்டும். தற்போது அணியில் விளையாடும் வீரர்கள் அனைவரும் சிஎஸ்கே அணியில் இருந்தவர்காள். அவர்களை வலைப்பயிற்சி, பயிற்சி போட்டிகளில் பார்க்க முடியும்.
அவர்களுக்கு வாய்ப்பு அளித்து, அவர்களின் செயல்பாடுகளை பார்க்க விரும்பினோம். இளம் வீரர்களின் திறமையை கிரிக்கெட் கண் கொண்டு பார்க்க கூடாது. அவர்களின் மனவலிமை மற்றும் களத்தில் விழிப்புணர்வுடன் இருக்கிறார்களா என்பதை மட்ட்யுமே பார்க்க வேண்டும். சிவம் துபே இருக்கும் போது, எதிரணியின் ஸ்பின்னர்களை அட்டாக்கில் இருந்து வெளியேற்ற முடியும்.
ஓய்வு குறித்து கருத்து
அதேபோல் பிரெவிஸ்-க்கு நன்றி சொல்ல வேண்டும். அவர்தான் வருண் மற்றும் சுனில் நரைனை அட்டாக் செய்ய தேவையில்லாத நிலையை உருவாக்கினார். இந்த மைதானம் அளவில் பெரியது அல்ல. இந்த போட்டியில் களமிறங்கும் போது கடைசி பேட்ஸ்மேன் நான் என்பதை அறிந்தேன். சிவம் துபே சரியாக கணித்து தேவையான 2 சிக்சர்களை விளாசினார்.
எங்கு சென்றாலும் ரசிகர்கள் என் மீது அன்பை பொழிகிறார்கள். ஆனால் எனக்கு 43 வயதாகிவிட்டது என்பதை மறக்க கூடாது. நான் ஓய்வு பெற்று நீண்ட நாட்களாகிவிட்டது. அவர்களுக்கு எனது கடைசி சீசன் எதுவென்று இன்னும் தெரியவில்லை. ஒரு ஆண்டுக்கு 2 மாதங்கள் மட்டுமே விளையாடுகிறேன். இந்த ஐபிஎல் முடிவடைந்த பின், அடுத்த 8 மாதங்களுக்கு பணிகள் இருக்கிறது. மீண்டும் இதே அழுத்தத்தை என் உடலால் தாங்க முடிந்தால் விளையாடுவேன். இப்போது வரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்று தெரிவித்தார்.

