நீங்க வேணும்னா பாருங்க.. இவர் ஈஸியா கோலியோட 50 சதம் ரெக்கார்ட உடைச்சிடுவாரு.. பாகிஸ்தான் வீரர் கம்ரான் அக்மல் அதிரடி பேட்டி.!

2023 ஆம் ஆண்டின் உலகக் கோப்பை வருகின்ற ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைய இருக்கிறது. 19ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெற இருக்கும் இறுதிப்போட்டியில் ஐந்து முறை உலக சாம்பியன் ஆஸ்திரேலியா அணியும் இரண்டு முறை உலக சாம்பியன் இந்திய அணியும் மோத இருக்கின்றன. 2019 ஆம் வருட உலகக் கோப்பையில் இந்த இரண்டு அணிகளும் அரையிறுதி போட்டியில் தோல்வியடைந்ததும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

நடப்பு உலக கோப்பையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது அரையிறுதி போட்டியில் இந்திய அணியின் ரன் மெஷின் விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தனது 50ஆவது சதத்தை நிறைவு செய்தார். இதன் மூலம் உலக கிரிக்கெட்டின் ஒரு நாள் போட்டிகளுக்கான வரலாற்றில் அதிக சதங்கள் எடுத்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார். இதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கர் 49 சதங்கள் எடுத்து இந்த சாதனைக்கு சொந்தக்காரராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

கொல்கத்தாவில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் டெண்டுல்கரின் 49 சத சாதனையை சமன் செய்த விராட் கோலி முதல் அரை இறுதிப் போட்டியில் சச்சின் டெண்டுல்கரின் சொந்த ஊரான மும்பையில் வைத்து முறியடித்திருக்கிறார். இது இந்திய கிரிக்கெட்டில் ஒரு சிறப்பான தருணமாக பார்க்கப்படுகிறது. இதுவரை சச்சினின் சாதனைகளை யார் முறியடிப்பார்கள் என்று கேள்விகள் எழுந்து வந்த நிலையில் தற்போது விராட் கோலியின் 50 சத சாதனையை வரும் காலங்களில் யார் முறியடிப்பார்கள் என்ற விவாதங்கள் எழுந்திருக்கின்றன.

- Advertisement -

இது தொடர்பாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கம்பரான் அக்மல் விராட் கோலியின் சாதனைகளை முறியடிக்க கூடிய இரண்டு வீரர்களை தேர்வு செய்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் இந்த இரண்டு வீரர்களால் மட்டும் தான் விராட் கோலியின் சாதனையை முறியடிக்க முடியும் எனவும் தெரிவித்திருக்கிறார். அந்த இரண்டு வீரர்களில் ஒருவர் பாகிஸ்தானை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது சம்பந்தமாக பேசியிருக்கும் அக்மல்” விராட் கோலியின் 50 சத சாதனையை முதல் மூன்று இடங்களில் களம் இறங்கும் வீரர்களால் மட்டுமே முறியடிக்க முடியும். மிடில் ஆர்டரில் விளையாடும் வீரர்கள் இந்த சாதனையைப் பற்றி நினைத்து கூட பார்க்க முடியாது. அந்த வகையில் விராட் கோலியின் 50-வது சதசாதனையை முறியடிக்கும் வீரர் நமது நாட்டில் இருக்கிறார். அவர்தான் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் பாபர் அசாம். அவருக்கு தற்போது 29 வயது தான் ஆகிறது. மேலும் பாபருக்கு அடுத்தபடியாக இந்த சாதனையை முறியடிக்கும் வீரராக இந்தியாவின் கில் இருக்கிறார். இந்த இரண்டு வீரர்களால் மட்டும் விராட் கோலியின் சாதனையை முறியடிக்க முடியும்” என தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி 279 இன்னிங்ஸ்களில் முறியடித்திருக்கிறார். 29 வயதான பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம் இதுவரை 114 போட்டிகளில் விளையாடி 19 சதங்கள் எடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்திய அணியின் கில் இதுவரை 43 போட்டிகளில் விளையாடி 6 சதங்கள் எடுத்துள்ளார். இந்திய அணியின் எதிர்கால நட்சத்திரமாக பார்க்கப்படும் இவர் இன்னும் பல சாதனைகளை முறியடிப்பார் என ரசிகர்களும் விமர்சகர்களும் எதிர்பார்க்கின்றனர்.

தற்போது பாபர் மற்றும் கில் இருவரும் சதம் எடுத்திருக்கும் புள்ளி விவரங்களை வைத்து பார்க்கும் போது பாபர் 50-வது ஒரு நாள் போட்டி சதம் எடுப்பதற்கு முன்னுறு இன்னிங்ஸ் தேவைப்படும். கில்லுக்கு 358 இன்னிங்ஸ்கல் தேவைப்படும் என தரவுகள் தெரிவிக்கின்றன. மேலும் இது அவர்களது பார்ம் மற்றும் பிட்னஸ் ஆகியவையும் சம்பந்தப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles