ஐபிஎல்லில் ஆண்ட அணிகள் என்று கருதப்படும் அணிகளில் ஒன்று மும்பை இந்தியன்ஸ். சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டுமே ஐபிஎல்லில் வெற்றிகரமான அணிகள். தலா ஐந்து முறை பட்டம் வென்ற சாம்பியன் அணிகளும் ஆகும்.
மும்பை இந்தியன்ஸ் அணியில் கேப்டனாக செயல்பட்டுக் கொண்டிருந்த ரோகித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கி விட்டு குஜராத் அணியிலிருந்து ஹர்திக் பாண்டியாவை டிரேடிங் முறையில் மாற்றம் செய்து மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஆக அறிவித்தது. அப்போதே ரசிகர்களின் எதிர்ப்புக்கும் உள்ளாகியது மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம்.
கேப்டன்சி மாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து ரோகித் சர்மா தரப்பில் இருந்து தெளிவான விளக்கம் எதுவும் இதுவரை வெளிவராத நிலையில், ரோகித் சர்மாவிடமிருந்து கேப்டன் பதவி பறிக்கப்பட்டது இதன் மூலமே உண்மையாகிறது. இதனால் ஹர்திக் பாண்டியாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மும்பை அணி விளையாடும் மைதானங்களில் எல்லாம் ரோகித் சர்மாவின் ரசிகர்கள் அவருக்கு எதிராக மைதானத்தில் கூச்சல்களை எழுப்பத் தொடங்கினர்.
இது மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை மனதளவில் உளவியல் ரீதியாக பாதிப்பு அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கேப்டன்சி, பேட்டிங் மற்றும் பந்து வீச்சு என அனைத்திலுமே தற்போது தடுமாறி வருகிறார். இதனைத் தொடர்ந்து ஹர்திக் பாண்டியாவுக்கு ஆதரவாக விராட் கோலி மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் ரசிகர்கள் இதுபோன்ற கேலி, கிண்டல் செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று வலியுறுத்தினர்.
எனவே இந்த சம்பவம் தொடர்பாக பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம் கூறும் பொழுது
” தற்போது நடந்து கொண்டிருக்கும் பிரச்சனைதான் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பிரச்சனை. ரசிகர்கள் நாங்கள் முன்னேறவே மாட்டோம் என்ற வகையில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். ரசிகர்கள் கொஞ்சம் அமைதியாக இருக்க வேண்டும்.
எப்படி இருந்தாலும் அவர் இந்திய வீரர், உங்களுடைய வீரர். அவர் உங்கள் அணிக்காக விளையாடிக் கொண்டிருக்கிறார். உங்கள் அணியை வெற்றி பெற வைக்க கூடியவரும் அவரே. இதனால் அவருக்கு எதிராக வெறுப்பை காட்டக்கூடாது. கொஞ்சம் அமைதியாக இருக்க வேண்டும். உங்கள் கோபத்தை காட்டலாம். ஆனால் தொடர்ந்த அவர் மீது விமர்சனங்களை வைக்கக் கூடாது. வருங்காலத்தை கருத்தில் கொண்டு இது போன்ற முடிவுகள் எடுக்கப்படுவது என்பது சாதாரண விஷயமாகும்.
இதையும் படிங்க:தோனி சிக்ஸ் அடிச்சது எல்லாம் ஒரு விஷயமா.. தோடியை புகழ்ந்து பேசியதால் கோவமான ஹர்பஜன் சிங்.. நடந்தது என்ன?
சிஎஸ்கே அணியில் எடுக்கப்பட்டதை போன்றுதான் மும்பை அணியிலும் தற்போது எடுக்கப்பட்டு இருக்கிறது. என்னைப் பொருத்தவரை ரோகித் சர்மா இன்னும் ஒரு ஆண்டு கேப்டன் ஆக செயல்பட்டிருக்கலாம். ஹர்திக் பாண்டியா இந்த வருடம் ஒரு சாதாரண வீரரை போன்று விளையாடிவிட்டு அடுத்த வருடம் அவர் கேப்டன் பதவியை ஏற்று இருக்கலாம். எனவே உங்கள் சொந்த வீரரை விமர்சிப்பதில் எந்தவித அர்த்தமும் கிடையாது” என்று கூறி இருக்கிறார்.

