ஆர்சிபி தோல்வி.. மனதளவில் பாதிப்படைந்தாரா கோலி.? டி20 உலக கோப்பையில் பங்கு பெற தாமதம்.. காரணம் என்ன?

17வது ஐபிஎல் தொடர் இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான இறுதி போட்டியோடு முடிவடைகிறது.

- Advertisement -

இதை அடுத்து வருகிற ஜூன் மாதத்தில் இருந்து அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் உள்ள கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளதால் அனைத்து இந்திய வீரர்களும் அதற்கு தயாராகி வருகின்றனர். இதில் முன்னணி இந்திய வீரர்கள் அனைவரும் தற்போது அமெரிக்கா புறப்பட்டு சென்றுள்ள நிலையில், விராட் கோலி மற்றும் பங்கேற்காதது ரசிகர்களிடையே சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

இந்திய அணியின் கேப்டன் ஆன ரோஹித் சர்மா பங்கு பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி லீக் சுற்றோடு வெளியேறியதால், மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த பும்ரா, சூர்யகுமார் யாதவ் மற்றும் ரோகித் சர்மா ஆகிய முன்னணி வீரர்களும், ஹர்ஷ்தீப் சிங் மற்றும் முகமது சிராஜ், அக்சார் பட்டேல் ஆகிய இதர அணி வீரர்களும் தற்போது விமானம் மூலமாக அமெரிக்கா புறப்பட்டு சென்றனர்.

- Advertisement -

இந்திய அணியின் துணை கேப்டனாக இருக்கும் ஹர்திக் பாண்டியா தற்போது ஏற்பட்டுள்ள குடும்ப சூழ்நிலை காரணமாக அவர் இன்னும் இந்திய அணியுடன் கலந்து கொள்ளவில்லை. அவரைத் தவிர கிட்டத்தட்ட பெரும்பாலான முன்னணி வீரர்கள் அனைவரும் அமெரிக்கா சென்றுள்ள நிலையில் விராட் கோலி மட்டும் இன்னும் இந்திய அணியுடன் கலந்து கொள்ளவில்லை.

சமீபத்தில் பிளே ஆப் சுற்றில் ராஜஸ்தான் அணியுடன் ஏற்பட்ட தோல்வியின் காரணமாக, மனதளவில் விராட் கோலி சற்று பாதிப்பு அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் மட்டும் மும்பையில் தற்போது தங்கி இருக்கிறார். ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு வயதாகி வருவதால் இதுவே அவர்களது கடைசி டி20 உலகக்கோப்பை என நினைக்கும் வேளையில், முன்னணி வீரரான விராட் கோலி பங்கேற்காமல் இருப்பது ரசிகர்களிடையே சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

- Advertisement -

அவர் வருகிற மே 30ஆம் தேதி அமெரிக்கா செல்ல உள்ளார் என்ற தகவலும் கிடைத்திருக்கிறது. இந்த சூழ்நிலையில் வருகிற ஜூன் 1ஆம் தேதி இந்தியா தனது முதல் பயிற்சி போட்டியை தொடங்க உள்ளது. அமெரிக்காவின் சூழ்நிலை மற்றும் கள ஆடுகளத்தின் தன்மை இந்திய அணியில் வீரர்கள் களமிறங்கக் கூடிய வரிசை போன்ற முக்கிய நிகழ்வுகளை அணியின் வீரரான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரை கலந்தாலோசிக்க வேண்டும்.

இதையும் படிங்க:தோனியின் வழியை பின்பற்றும் கம்மின்ஸ்.. 35 வினாடியில் ஒரு டீம் மீட்டிங்கா.? உண்மையை உடைக்கும் சன்ரைசர்ஸ் கோச்

இந்த சூழ்நிலையில் விராட் கோலி பங்கேற்காமல் இருப்பது அது இந்திய அணிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. மேலும் இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் தொடரினால் உலகக் கோப்பைக்கு ஒரு அணியாக தயாராவதற்கு இந்திய அணியினருக்கு போதிய நேரமும் கிடைக்கவில்லை. இதனால் கிடைக்கின்ற நேரத்திலாவது இந்திய அணியினர் அனைவரும் ஒருங்கிணைந்து இருக்கும் வேளையில் விராட் கோலி மற்றும் இவ்வாறு செய்திருப்பது ஏற்கத்தக்கது அல்ல என்ற கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles