நேற்று நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் விராட் கோலி அபாரமாக விளையாடி 77 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருதினைப் பெற்றார். டி20 உலக கோப்பையில் தனது பெயர் நீக்கப்படுவது குறித்து எழுந்த சர்ச்சையில் பிசிசிஐக்கு ஒரு காட்டமான பதிலை தெரிவித்து இருக்கிறார்.
ஐபிஎல் ஆறாவது போட்டியில் சின்னச்சாமி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 176 ரன்கள் குவித்தது. பஞ்சாப் அணியில் சிகார் தவான் அதிகபட்சமாக 43 ரன்கள் குவித்தார். பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய பெங்களூர் அணி விராட் கோலி மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோரது உதவியுடன் இலக்கினை எட்டி வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் விராட் கோலி அதிகபட்சமாக 77 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருதினை பெற்றார். மற்றும் தினேஷ் கார்த்திக் 10 பந்துகளில் 28 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். போட்டிக்கு பின்னர் பேசிய விராட் கோலி ரசிகர்களின் இவ்வளவு அன்பும்,ஆதரவும்பெற்றது எனக்கு உண்மையிலேயே ஆச்சரியத்தை அளிக்கிறது என்று கூறியிருக்கிறார்.
இதற்கு முன்னர் குஜராத் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது அப்போது வர்ணனையாளராக இருந்த கெவின் பீட்டர்சன் மற்றும் ரவி சாஸ்திரி ஆகியோர் டி20 உலக கோப்பை குறித்து பேசிக் கொண்டிருந்தபோது அமெரிக்கா போன்ற நாடுகளில் டி20 கிரிக்கெட்டை பிரபலப்படுத்த விராட் கோலி போன்ற நபர் கட்டாயம் தேவை என்று கெவின் பீட்டர்சன் கூறினார். அதை மறுத்த ரவி சாஸ்திரி போட்டியை பிரபலப்படுத்துவதை விட உலக கோப்பையை வெல்வதே முக்கியம் என்று கூறி விராட் கோலி மறைமுகமாக நிராகரித்தார்.
எனவே இந்த செய்தியை அறிந்த விராட் கோலி டி20 கிரிக்கெட் பிரபல படுத்தவே தற்போது எனது பெயர் இணைக்கப்பட்டு இருக்கிறது என்று இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் ரவி சாஸ்திரியைத் தாக்கி பேசியிருக்கிறார். இது குறித்து அவர் கூறியதாவது
“நான் தற்போது டி20 கிரிக்கெட்டுக்கு வரும் பொழுது உலகின் பல்வேறு பகுதிகளில் டி20 கிரிக்கெட்டை பிரபலப்படுத்துவதற்காக எனது பெயர் இணைக்கப்பட்டுள்ளதை நான் அறிந்தேன். நான் அந்த வெளிச்சத்தை பெற்று இருக்கிறேன்.
நான் இந்த இரண்டு மாதங்கள் எனது குடும்பத்தினருடன் இருந்ததற்காக கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.இது ஒரு வித்தியாசமான அனுபவம். வேறொரு நாட்டில் ஒரு சாதாரணமான நபராக இருப்பது அற்புதமான அனுபவம். அதை நானும் என் குடும்பத்தினரும் பெற்றிருப்பது மகிழ்ச்சி. மேலும் எனது சிறந்த ஆட்டத்தை கொடுக்க முயற்சிப்பேன்” என்று கூறியிருக்கிறார்.
டி20 உலக கோப்பையில் தனது பெயர் நீக்கப்படுவது குறித்து அறிந்த விராட் கோலி தற்போது 77 ரன்கள் குவித்ததோடு தனது பேட்டின் மூலமாகவும், அதற்கு பிறகு அளித்த பேட்டியில் தனது சொற்களின் மூலமாகவும் பிசிசிஐக்கு தகுந்த பதிலடி கொடுத்திருக்கிறார். எனவே அவரது பெயர் நீக்கப்பட்டால் அது இனி மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

