இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஜாம்பவான் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார்.
இது பலரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் விராட் கோலி தனது ஓய்வு முடிவு குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி கடந்த 2024 ஆம் ஆண்டு இந்திய அணி டி20 உலக கோப்பை வென்ற பிறகு ரோகித் சர்மாவுடன் இணைந்த டி20 ஃபார்மெட்டில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்த சூழ்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக ரோஹித் சர்மா டெஸ்ட் ஃபார்மேட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த நிலையில் விராட் கோலியும் ஓய்வு பெற விரும்புகிறார் என கூறப்பட்டது.
இருப்பினும் விராட் கோலியை பிசிசிஐ சமாதானம் செய்து வருவதாகவும் விராட் கோலி தொடர்ந்து விளையாடுவார் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது விராட் கோலி டெஸ்ட் ஃபார்மேட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். இது விராட் கோலி ரசிகர்கள் மட்டுமில்லாமல் இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே சோகமான சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறது.
இதுகுறித்து விராட் கோலி கூறும் போது ” நான் இதுவரை டெஸ்ட் கிரிக்கெட் விளையாட ஆரம்பத்திலிருந்து 14 வருடங்கள் ஆகிறது. எனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை என்பது பெரிய ஒரு சோதனையாகும். அதுவே என்னை வடிவமைத்தது அதுவே எனக்கு நிறைய விஷயங்களை கற்றுக் கொடுத்தது என்றே கூறலாம். வெள்ளை உடை அணிந்து விளையாடும் போது மற்ற பார்மெட்டில் விளையாடுவதை விட ஒரு தனிப்பட்ட ஸ்பெஷலான உணர்வு எப்போதுமே இருக்கும்.
இதையும் படிங்க:வீடியோ போட்டு விராட் கோலியை கலாய்க்கும் இங்கிலாந்து அணி.. ஓய்வு பெற இதுதான் காரணமா.? பதிலடி கொடுத்து வரும் ரசிகர்கள்
அரவணைப்பு, நீண்ட நாட்கள் தனிப்பட்ட முறையில் யாரும் எதிர்பார்க்காத சில தருணங்கள் என அனைத்தும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அடங்கியுள்ளன. இந்த வடிவ கிரிக்கெட்டில் இருந்து நான் விலகிச் செல்வது என்பது எளிதான விஷயம் கிடையாது. ஆனால் இந்த வடிவம் விளையாட்டுக்கு என்னால் முடிந்த அனைத்தையும் கொடுத்து விட்டேன். இந்த வடிவம் நான் எதிர்பார்த்ததை விட நிறைய விஷயங்கள் எனக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது. இந்த விளையாட்டில் எனக்கு ஆதரவு அளித்தவர்களுக்கு நான் ஒரு மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வடிவத்தை திரும்பிப் பார்க்கும்போது என் மனதில் ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும்” என விராட் கோலி பேசி இருக்கிறார்.

