என்னது.. கோலி ஐபிஎல் 2024 ஆட மாட்டாரா.?. சுனில் கவாஸ்கரால் கிளம்பிய சர்ச்சை.. ரசிகர்கள் கோபம்.. நடந்தது என்ன.?

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வெற்றிகரமாகக் கைப்பற்றி உள்ளது.இந்நிலையில் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி முடிந்து ஒரு வாரத்துக்கு பின்னர் ஐபிஎல் தொடங்க உள்ளதால் அனைத்து வீரர்களும் ஐபிஎல்க்கு தயாராக வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இதனால் அணியின் முன்னணி வீரரான வேகப்பந்துவீச்சாளர் பும்ராவிற்கு கடைசி இரு டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்திய அணியின் நட்சத்திர வீரரும், ஜாம்பவான் விராட் கோலி இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரு டெஸ்ட் போட்டிகளில் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுகிறார் என்ற செய்தி வெளிவந்தது. பின்னர் இங்கிலாந்து அணிக்கு எதிரான எஞ்சிய மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் இருந்து விலகுகிறார் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.

- Advertisement -

இதற்கான முழுமையான காரணம் எதுவும் வெளிவராத நிலையில், தனக்கு மகன் பிறந்து இருப்பதை விராட் கோலி சமூக வலைதளங்களின் வாயிலாக வெளியிட்டு டெஸ்ட் தொடரில் இருந்து விலகிய காரணத்தைத் தெளிவு படுத்தினார். தற்போது லண்டனில் இருக்கும் விராட் கோலி மகனுக்கு அகாய் கோலி எனவும் பெயர் சூட்டி குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் டெஸ்ட் தொடர் முடிந்து ஐபிஎல் தொடங்கும் சில நாட்களிலேயே முதல் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கும் நடைபெற உள்ளன. இதில் பெங்களூரு அணியின் முதுகெலும்பான விராட் கோலி ஐபிஎல் தொடரில் பங்கு பெறுவாரா? இல்லையா? இன்று சந்தேகம் தற்போது நிலவி வருகிறது.

ஐபிஎல் முடிந்து உலகக் கோப்பை சிறிது வாரங்களிலேயே தொடங்க உள்ளதால் இது உலகக் கோப்பைக்குப் பங்குபெற சிறந்த பயிற்சியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் விராட் கோலி ஐபிஎல்லில் பங்கு பெறுவாரா? இல்லையா? என்பது குறித்து சில தகவல்களைப் பகிர்ந்து உள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது

- Advertisement -

“விராட் கோலி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தனிப்பட்ட காரணங்களுக்காக விளையாடவில்லை. ஒருவேளை அவர் ஐபிஎல்லிலும் விளையாடாமல் போகலாம்” என்று கூறி இருக்கிறார். ஏதாவது மகன் பிறந்துள்ளார் என்ற காரணத்திற்காக டெஸ்ட் தொடரில் விளையாடவில்லை. அதேபோல ஐபிஎல்லிலும் விளையாடாமல் இருக்கலாம் என்று விராட் கோலி மறைமுகமாக தாக்கிப் பேசியுள்ளார் என்று ரசிகர்கள் சுனில் கவாஸ்கரின் பேட்டிக்கு ட்விட்டரில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றதற்கு வாழ்த்துத் தெரிவித்த விராட் கோலி ஐபிஎல்லில் பங்கு பெற வேண்டுமென பெங்களூரு ரசிகர்கள் மற்றும் இந்திய ரசிகர்களின் எதிர்பார்க்கும் வேளையில் கவாஸ்கரின் இக் கருத்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. முதல் போட்டியே சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் மோத உள்ளதால் இத்தொடர் ரசிகர்களிடையே மிகவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles