வீடியோ.. ஒற்றை கை ஸ்வீப் ஷாட்.. டெவோன் கான்வேயின் விசித்திரமான பேட்டிங்.. நம்ப முடியாத கிரிக்கெட் ரசிகர்கள்.!

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வருகின்ற ஐந்தாம் தேதி முதல் துவங்கி நடைபெற இருக்கிறது. இந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டின் லீக் ஆட்டங்களில் விளையாடுவதற்கு முன்பாக தங்களை தயார் படுத்துவதற்கு அனைத்து அணிகளும் பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வருகின்றன. இந்த பயிற்சி போட்டிகள் கடந்த 29ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

- Advertisement -

உலகக் கோப்பை பயிற்சி போட்டிகளில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் விளையாடின. இந்தப் போட்டி கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில் வைத்து நடைபெற்றது. இங்கு நடைபெற இருந்த இரண்டு போட்டிகளும் மழையால் கைவிடப்பட்ட நிலையில் இந்தப் போட்டி குறித்த நேரத்தில் துவங்கியது.

- Advertisement -

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. காயம் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக ஓய்வில் இருந்த நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் இந்தப் போட்டியில் கேப்டனாகவே அணிக்கு திரும்பினார். முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 321 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டெவோன் கான்வே 78 ரன்களும் டாம் லெதம் 53 ரண்களும் கிளென் பிலிப்ஸ் 43 ரண்களும் எடுத்தனர்.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து ஆடிய தென்னாப்பிரிக்கா 211 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்திருந்த போது மீண்டும் மழை குறுக்கிட்டதால் டக்வேர்த் லிவீஸ் விதிப்படி நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்தப் போட்டியின் பரபரப்பான கட்டத்தில் மழை பெய்ததால் ரசிகர்களும் ஏமாற்றம் அடைந்தனர் . நியூசிலாந்து அணியை பொறுத்தவரை கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடாத வீரர்கள் இந்த பயிற்சி போட்டியில் மீண்டும் ஃபார்முக்கு திரும்பியது அந்த அணிக்கு மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் ஆக அமைந்திருக்கிறது.

குறிப்பாக கடந்த போட்டியில் கோல்டன் டக் எடுத்த டெவோன் கான்வே இந்தப் போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடி 73 பந்துகளில் 78 ரன்கள் எடுத்தார். இதில் 11 பௌண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடங்கும். மேலும் அவர் ஆட்டம் இழக்காமல் ரிட்டயர்டு அவுட் ஆகி வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது . இவரைப் போலவே கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடாத டாம் லேதம் மற்றும் கிளென் பிலிப்ஸ் ஆகியோரும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக டெவோன் கான்வே ஆட்டம் மிகச் சிறப்பாக இருந்தது. மேலும் இவர் தென்னாப்பிரிக்கா அணியின் வீரர் எய்டன் மார்க்ர்ம் வீசிய பந்தில் ஒரு கையால் அடித்த ஸ்வீப் ஷாட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 17-வது ஓவரில் மார்க்ர்ம் வீசிய பந்தை முட்டி போட்டு தனது ஒரு கையால் பைன் லெக் திசையில் அலாதியாக இவர் அடித்த அந்த ஷாட் ரசிகர்களை மிகவும் ஈர்த்தது .

2023 ஆம் ஆண்டிற்கான இந்த உலகக் கோப்பை தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து அணியை குஜராத்தில் உள்ள அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து சந்திக்க இருக்கிறது. இந்த இரண்டு அணிகளும் கடந்த வருட உலக கோப்பையின் இறுதி போட்டியில் விளையாடியவை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நியூசிலாந்து அணி தான் பங்கேற்ற இரண்டு பயிற்சியா ஆட்டங்களிலும் வெற்றி பெற்று நம்பிக்கையுடன் உலகக் கோப்பையை எதிர்கொள்ள தயாராக இருக்கிறது .டெவோன் கான்வே அடித்த அற்புதமான ஸ்வீப் ஷாட் வீடியோ இந்தப் பதிவுடன் இணைக்கப்பட்டுள்ளது .

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles