[வீடியோ] கால்பந்து போல கிரிக்கெட்டிலும் முதல் முறையாக ரெட் கார்டு.. சுனில் நரேனுக்கு நேர்ந்த சோகம்.. நடந்தது என்ன.?

பதினோராவது கரிபியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் வெஸ்ட் இண்டீஸ் நாட்டின் செயின்ட் கிட்ஸ் நகரில் அமைந்துள்ள வாக்னர் பார்க் மைதானத்தில் வைத்து நடைபெற்று வருகிறது. ஆறு அணிகள் கலந்து கொள்ளும் இந்த டி20 கிரிக்கெட் லீக் ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி துவங்கி செப்டம்பர் மாதம் 24 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது .

- Advertisement -

இந்த கிரிக்கெட் போட்டியிலும் உலக கிரிக்கெட் டி20 போட்டிகளை போலவே உலகெங்கிலும் உள்ள சர்வதேச முன்னணி வீரர்கள் கலந்துகொண்டு பங்கேற்று விளையாடி வருகின்றனர் . ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெற்ற இந்திய அணியின் முன்னாள் வீரரும் சிஎஸ்கே அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மனுமான அம்பத்தி ராயுடு இந்த தொடரில் செயின்ட் கிட்ஸ் & நிவிஸ் பேட்டரியோட பேட்ரியாட்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

- Advertisement -

இந்த கிரிக்கெட் லீக் டி20 போட்டிகளில் மெதுவாக பந்து வீசப்படுவதை தவிர்ப்பதற்கென்று கடுமையான விதிகளை சிபிஎல் நிர்வாகம் அறிமுகப்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஓவர்கள் மெதுவாக வீசப்பட்டால் நான்கு வீரர்களை மட்டுமே உள் வட்டத்திற்கு வெளியே வைத்து வந்து வீசச் செய்யும் பெனால்டி நடைமுறையில் உள்ளது .

- Advertisement -

இந்நிலையில் கரீபியன் லீக் போட்டிகளில் பந்து வீசும் அணி மெதுவாக செயல்பட்டால் அவர்கள் காலதாமதமாக வீசிய நேரத்தின் அடிப்படையில் 18 வது ஓவரில் உள்வட்டத்திற்கு வெளியே நான்கு வீரர்கள் மட்டுமே களத்தடிப்பிற்கு அனுமதிக்கப்படுவார்கள். 19ஆவது ஓவரில் மூன்று வீரர்களுக்கு மட்டுமே 30 அடி உள்வட்டத்திற்கு வெளியே களத்தடுப்பு செய்வதற்கு அனுமதி உண்டு . மேலும் 20-வது ஓவரில் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு ஒரு வீரர் வெளியேற்றப்படுவார் . பில்டிங் செய்யும் அணியானது 10 வீரர்களுடன் மட்டுமே களத்தடுப்பு செய்வதற்கு அனுமதிக்கப்படும் .

நேற்று நடைபெற்ற ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் மற்றும் செயின்ட் கிட்ஸ் அண்ட் நிவிஸ் பேட்டரியாட்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் நைட் ரைடர்ஸ் அணி களத்தடுப்பு செய்து இருந்தபோது காலதாமதமாக பந்து வீசியதால் அந்த அணிக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டது. இதன் காரணமாக இறுதி ஓவரில் அந்த அணியின் முன்னணி பந்துவீச்சாளரான சுனில் நரேனை களத்தில் இருந்து வெளியேற்றிவிட்டு 10 வீரர்களுடன் களத்தடுப்பு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு நிர்பந்திக்கப்பட்டார் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் கைரன் பொல்லார்டு.

- Advertisement -

இறுதி ஓவரில் செயின்ட் கிட்ஸ் அணியின் கேப்டன் ருதர்போர்டு 18 ரன்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் இந்தப் போட்டியில் பொல்லார்டு மற்றும் ரசல் அதிரடியில் நைட் ரைடர்ஸ் அணி ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டிக்கு பின் பேசிய கேப்டன் பொல்லார்ட் ” உண்மையைச் சொல்வதென்றால் இந்த தண்டனை அனைத்து வீரர்களின் கடின உழைப்பையும் சுரண்டுவதாக இருக்கிறது . நாங்கள் ஒரு சிப்பாய்களைப் போல உணர்கிறோம் . எங்களுக்கு பணிக்கப்பட்டதைச் செய்கிறோம் . 35 முதல் 40 வினாடிகள் தாமதமாக செயல்படுவதற்கு இவ்வளவு பெரிய தண்டனை என்பது மிகவும் அபத்தமானது” என கடுமையாக விமர்சித்து இருக்கிறார் .

இந்த தண்டனையின் மூலம் கிரிக்கெட் வரலாற்றிலேயே ரெட் கார்டு முறையில் முதன் முதலில் வெளியேற்றப்பட்ட வீரராக சுனில் நரேன் இடம் பெறுகிறார் . இந்தப் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய அவர் 24 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles