ஆஸி-க்கு எதிரான போட்டியில் இந்த 3 பேர் கண்டிப்பா இருக்கணும்.. இந்திய அணிக்கு ஜாகீர் கான் அட்வைஸ்.!

13 வது 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நேற்று இந்தியாவில் கோலாகலமாக தொடங்கியது. இந்த உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.

- Advertisement -

இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணி நெதர்லாந்து அணியை எதிர்கொண்டு விளையாடி வருகிறது. இந்நிலையில் நாளை மறுநாள் நடைபெற இருக்கும் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியா அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்தப் போட்டி சென்னையில் உள்ள எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் வைத்து நடைபெற இருக்கிறது.

- Advertisement -

இந்தப் போட்டிக்காக இரண்டு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. சமீப காலமாக இந்தியாவிற்கு துவக்க வீரராக களம் இறங்கி ஏராளமான ரண்களை குவித்த சுப்மன் கில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார் . இதனால் அவர் இந்தியாவின் முதல் போட்டியில் விளையாடுவது சந்தேகத்திற்கு இடம் ஆகி உள்ளது. இவர் விளையாடாத பட்சத்தில் இஷான் கிஷான் துவக்க வீரராக களம் இறக்கப்படுவார் என தெரிகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வேத பந்துவீச்சாளரும் 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளில் அதிக விக்கெட் களை வீழ்த்திய வருமான ஜாகிர் கான் இந்திய அணி எந்த மாதிரியான திட்டங்களுடன் களம் இறங்க வேண்டும் என தனது கருத்துக்களை பகிர்ந்து இருக்கிறார். இது தொடர்பாக பேசியிருக்கும் அவர் ஆடுகளத்தின் தன்மையை பொறுத்து இந்திய அணி தங்களது பதினோரு வீரர்களையும் தேர்வு செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக பேசியிருக்கும் ஜாகீர் கான்” இந்திய அணி சென்னை ஆடுகளத்தில் மூன்று சுழற் பந்துவீச்சாளர்களுடன் களம் இறங்க வேண்டும். மேலும் பும்ரா சிராஜ் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் அணிக்கு வேகப்பந்துவீச்சாளர்களாக இருப்பார்கள் . சென்னை ஆடுகளம் சுழற் பந்துவீச்சிக்கு இதனால் மூன்று சுழற் பந்துவீச்சாளர்களை தேர்வு செய்து களம் இறங்க வேண்டும். சார்துல் தாக்கூருக்கு வாய்ப்பு வழங்கக் கூடாது” என தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

மேலும் இது தொடர்பாக பேசிய அவர்” பந்து சுழலக்கூடிய மற்றும் மெதுவான ஆடுகளங்களில் ஆஸ்திரேலியா வீரர்கள் தடுமாறியதை சமீபத்தில் நடைபெற்ற ஒரு நாள் போட்டிகளின் போது தெரிந்து கொண்டோம். இதனால் இந்தியா மூன்று சுழற் பந்துவீச்சாளர்களை பயன்படுத்துவதால் அது ஆஸ்திரேலியா அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமையும் எனவும் தெரிவித்தார். இந்திய அணியிடம் ரவிச்சந்திரன் அஸ்வின். குல்தீப் யாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜா என்ற மூன்று தரமான சுழற் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள் எனவும் கூறினார் .

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளைய தினம் இரண்டு போட்டிகள் நடைபெற இருக்கின்றன. முதல் போட்டியில் பங்களாதேஷ் அணி ஆப்கானிஸ்தான் அணியை எதிர்த்து தர்மசாலாவில் விளையாட இருக்கிறது. இந்தப் போட்டி காலை 10:30 மணி அளவில் தொடங்குகிறது. இதனைத் தொடர்ந்து நடைபெற இருக்கும் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகள் மோத இருக்கின்றன. இந்தப் போட்டி டெல்லியில் மதியம் 2 மணிக்கு தொடங்க இருக்கிறது. இதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணி அளவில் இந்தியா ஆஸ்திரேலியா அணியை சென்னையில் வைத்து எதிர்கொள்கிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles