கோலி கிடையாது.. இவர்தான் 2023 வேர்ல்ட் கப்பில் அதிக ரன் அடிப்பார்.. வீரேந்தர் சேவாக் அதிரடி.!

அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் 13 வது 50 ஓவர் உலகக் கோப்பை போட்டிகள் வருகின்ற அக்டோபர் மாதம் 5ஆம் தேதி முதல் இந்தியாவில் தொடங்கி நடைபெற இருக்கிறது. 45 நாட்கள் நடைபெற இருக்கும் இந்த உலகக் கோப்பை போட்டியில் 48 ஆட்டங்கள் நடைபெற இருக்கின்றன. நவம்பர் 19ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வைத்து உலகக் கோப்பையின் இறுதிப்போட்டி நடைபெற இருக்கிறது .

- Advertisement -

பத்து நாடுகள் கலந்து கொள்ளும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்த முறை இந்தியாவில் வைத்து நடைபெறுகிறது . மேலும் இது இந்தியா நடத்தும் நான்காவது உலகக் கோப்பை போட்டியாகும் . இதற்கு முன்பு இந்தியா மூன்று முறை உலகக் கோப்பை போட்டிகளை நடத்தி இருந்தாலும் அதில் இலங்கை பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளும் இணைந்து நடத்தின . தற்போது முதல் முறையாக உலகக்கோப்பையின் அனைத்து போட்டிகளும் இந்தியாவில் மட்டுமே நடக்கிறது என்பது தனிச்சிறப்பாகும் .

- Advertisement -

உலகக் கோப்பை போட்டிகள் துவங்குவதற்கான நாட்கள் நெருங்கிக் கொண்டே இருக்கும் வேளையில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் உலகக் கோப்பை போட்டியை வெல்லப்போகும் அணி எது மற்றும் அதிக ரன்களை குவிக்க போகும் வீரர்கள் யார்? எந்தெந்த அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும் போன்ற கணிப்புகளை தற்போது வெளியிட துவங்கிவிட்டனர் . இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் துவக்க வீரரும் கிரிக்கெட் உலகில் அதிரடி ஆட்டக்காரராக விளங்கிய வீரேந்தர் சேவாக் 2023 ஆம் ஆண்டின் உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குறிக்கப் போகும் வீரரை பற்றிய தனது கணிப்பை தெரிவித்திருக்கிறார் .

- Advertisement -

2011 ஆம் ஆண்டின் உலகக்கோப்பை துவக்க போட்டியில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக 175 ரன்கள் அடித்து அசத்திய சேவாக் தற்போது நடைபெற இருக்கும் உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா அதிக ரன்களை குவிப்பார் என்று தனது கருத்தை தெரிவித்திருக்கிறார் . இந்திய ஆடுகளங்கள் டேட்டிங் இருக்கு சாதகமாக இருக்கும் என்று தெரிவித்த அவர் இதன் காரணமாக துவக்க வீரர்கள் அதிக ரன்களை குறிப்பார்கள் எனவும் தெரிவித்திருக்கிறார் . இதுகுறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் இன்ஸ்டாகிராம் வீடியோ ஒன்றில் பேசியிருக்கிறார் சேவாக் .

அந்த நேர்காணலில் ரோகித் சர்மா பற்றி தெரிவித்திருக்கும் அவர் ” இந்தியாவில் இருக்கக்கூடிய ஆடுகலன்கள் பேட்டிங் இருக்கு சாதகமான அருமையான ஆடுகளங்கள் . இதன் காரணமாக துவக்க வீரர்கள் அதிக கரங்களை குவிக்க வாய்ப்பு இருக்கிறது . இதில் ஒரு வீரரை தேர்ந்தெடுக்கச் சொன்னால் நான் ரோகித் சர்மா என்று கூறுவேன் . மேலும் ஒரு சில வீரர்களும் ரன் குவிக்க வாய்ப்பு இருக்கிறது நான் ஒரு இந்தியன் என்பதால் இந்திய வீரரை தான் தேர்ந்தெடுப்பேன்” என தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

மேலும் இது பற்றி தொடர்ந்து பேசிய சேவாக் ” உலகக்கோப்பை போன்ற மிகப்பெரிய போட்டிகளில் அவரது எனர்ஜி லெவல் மற்றும் ஆட்டத்திறன் பல மடங்காக உயர்கிறது அதனால் நிச்சயமாக இந்த வருட உலகக் கோப்பையில் அவர் மிகச் சிறப்பாக செயல்படுவார் . இந்த முறை அவர் கேப்டனாகவும் இருப்பதால் அதிகமான ரன்களை குவிப்பார் என்று நம்புகிறேன் என தெரிவித்திருக்கிறார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளில் 5 சதங்கள் உட்பட 648 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது . இவருக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியா அணியின் வீரர் டேவிட் வார்னர் 647 ரன்கள் உடன் இரண்டாம் இடத்திலும் பங்களாதேஷ் அணியின் கேப்டன் ஷகீப் அல் ஹசன் 606 ரன்கள் உடன் மூன்றாம் இடத்திலும் இருந்தனர்

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles